கடந்த ஜுன் 3 ம் தேதி உலகம் முழுவதும் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் வெளியாகி பிரமாண்ட வரவேற்பை பெற்று வருகிறது. கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், சிறப்பு தோற்றத்தில் சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்திருக்கும் இப்பட பாடல்கள் அனைத்துமே செம ஹிட்.
கமல் தயாரிப்பில் உருவான படங்களிலேயே மிக அதிகமான வசூலை விக்ரம் படம் குவித்து வருகிறது. மல்டி ஸ்டார்களைக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டதாலும், லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்ததாலும், விக்ரம் படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு காணப்பட்டது. இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் படமும் அமைந்ததால் தியேட்டர்கள் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
இந்நிலையில் விக்ரம் படம் வெற்றியை தொடர்ந்து படக்குழுவினர் செய்தியாளர்களளை சந்தித்தனர். இந்த சந்திப்பில் கமல்ஹாசன், இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் லோகேஷ்ராஜ், உதயநிதி ஆகியோர் பங்கேற்றனர். விக்ரம் படத்தை தமிழில் உதயநிதியின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் வெளியிட்டது.
நடிகை சாய் பல்லவி மீது ஹைதராபாத்தில் புகார்
இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் பேசிய போது, டான் பட விழாவில் சில உண்மைகளை பேசியது போல் இங்குன் சில உண்மைகளை சொல்ல வேண்டும். விக்ரம் படம் 3வது வாரத்தில் சென்று கொண்டிருக்கிறது. இப்போதே 75 கோடி ஷேர் கொடுத்துள்ளது. விக்ரம் படத்தை முதலில் பார்த்தவன் நான். இன்டர்வல் முடுஞ்சதும். இந்த மாதிரி ஒரு இண்டர்வல் எந்த தமிழ் படத்திலும் இருந்ததில்லை என கூறினேன். இந்தப் படம் ஹிட் ஆகும் என நினைத்தோம். ஆனால் சத்தியமாக இவ்வளவு பெரிய ஹிட் ஆகும் என நினைக்கவில்லை என்றார்.
இசையமைப்பாளர் அனிருத் பேசுகையில், விக்ரம் மறக்க முடியாத பயணம். ஆடியோ வெளியீடு விழாவில் சிறப்பாக வந்திருப்பதாக கூறினேன். அதை ரசிகர்கள் உண்மையாக்கியுள்ளனர். அதற்கு ரசிகர்களுக்கு நன்றி. கமல் என்ன கிஃப்ட் கொடுத்தார் என கேரளாவில் உசுப்பேற்ற கேட்டனர். விக்ரம் படம் கிஃப்ட் என கூறினேன் என்றார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.