ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெறுகிறது 'விக்ரம்' படத்தின் இசை வெளியீட்டு விழா

சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெறுகிறது 'விக்ரம்' படத்தின் இசை வெளியீட்டு விழா

விக்ரம் படத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில்

விக்ரம் படத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில்

உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்த படத்தை வெளியிடுகிறது. தற்போது, படத்தின் புரொமோஷன் பணிகளை படக்குழுவினர் விரைவுபடுத்தி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கமல் நடித்துள்ள விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீடு சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்டர் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பின்னர் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஏற்கனவே விக்ரம் படத்திலிருந்து சில கிளிம்ஸ் காட்சிகள் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

படத்தில் விஜய் சேதுபதியும், பகத் பாசிலும் வில்லன் கேரக்டரில் நடிக்கின்றனர். அனிருத் இசையில் படத்தின் பின்னணி இசை மிரட்டலாக அமைந்துள்ளது. 2018-ல் வெளியான விஸ்வரூபம் 2 படத்திற்கு பின்னர் கமலுக்கு எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை. இடையே இந்தியன் 2 ஷூட்டிங் நடைபெற்றது.

இதையும் படிங்க - கமல் ஹாசன் படத்தில் சாய் பல்லவி... பிறந்தநாளில் வெளியான அட்டகாச அறிவிப்பு!

ஆனால், படப்பிடிப்பு முழுமையடையாத நிலையில் விக்ரம் படம் ஜூன் 3-ல் திரைக்கு வருகிறது.

இதையும் படிங்க - 'பிசாசு 2' நடிகை ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..!

படத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசிலுடன் நரேன், காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ், ஷிவானி நாராயணன், ஆன்டனி வர்கிஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீடு ஆகியவை வரும் 15-ம்தேதி சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்த படத்தை வெளியிடுகிறது. தற்போது, படத்தின் புரொமோஷன் பணிகளை படக்குழுவினர் விரைவுபடுத்தி வருகின்றனர்.

Published by:Musthak
First published:

Tags: Kamal Haasan