Home /News /entertainment /

15-வது திருமண நாளில் இரண்டாவது குழந்தையின் வருகையை அறிவித்த ’விக்ரம்’ பிரபலம்!

15-வது திருமண நாளில் இரண்டாவது குழந்தையின் வருகையை அறிவித்த ’விக்ரம்’ பிரபலம்!

மனைவியுடன் நரேன்

மனைவியுடன் நரேன்

15-வது திருமண தினத்தில், தாங்கள் இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து காத்திருப்பதாக அறிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    நடிகர் நரேன் தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அறிவித்துள்ளார்.

    தமிழ் சினிமாவின் திறமையான நடிகர்களில் ஒருவர் நரேன். இயக்குனர் மிஷ்கினின் 'சித்திரம் பேசுதடி' படத்தின் மூலம் அறிமுகமான இவர், 'பள்ளிக்கூடம்', 'அஞ்சாதே' மற்றும் 'முகமூடி' ஆகியப் படங்களில் நடித்து பாராட்டைப் பெற்றார். இவர் சமீபத்தில் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' படத்தில் நடித்தார்.

    ஆகஸ்ட் 26, 2007 அன்று தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளரான மஞ்சுவை கோழிக்கோட்டில் மணந்தார் நரேன். இவர்களுக்கு 2009-ஆம் ஆண்டு தன்மயா என்ற பெண் குழந்தை பிறந்தது. இதற்கிடையே அவர்களின் 15-வது திருமண தினத்தில், தாங்கள் இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து காத்திருப்பதாக நரேன் மற்றும் மஞ்சு இருவரும் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளனர்.

    ஸ்கேன் ரிப்போர்ட் படத்தைக் காட்டியவாறு தனது மனைவியுடனான படத்தைப் பகிர்ந்து கொண்ட நரேன், "எங்கள் 15-வது திருமண ஆண்டு விழாவின் இந்த சிறப்பு நாளில், எங்கள் குடும்பத்தில் விரைவில் ஒரு புதிய உறுப்பினரை எதிர்பார்க்கிறோம் என்ற நல்ல செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

    ’மனிதன் மனிதன்' பாடல் டைட்டிலில் இடம்பெற்றது ரஜினி சாரால் தான் - ஏவிஎம் அருணா குகன்!



     




    View this post on Instagram





     

    A post shared by Narain Ram (@narainraam)






    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதோடு தனது மனைவி மற்றும் மகள் தன்மயாவுடனான மற்றொரு படத்தையும் பகிர்ந்துள்ளார். படங்களைப் பொறுத்தவரை கைதியில் (2019) இன்ஸ்பெக்டர் பிஜாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நரேன். பின்னர் விக்ரம் (2022) படத்தில் கோஸ்ட் அணியின் உறுப்பினராக காணப்பட்டார். லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸில் அவர் தொடர்ந்து பிஜாய் கதாபாத்திரத்தில் நடிப்பார்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Tamil Cinema

    அடுத்த செய்தி