ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விக்ரம் படத்தின் 100வது நாள்.. கலைவாணர் அரங்கில் கொண்டாட்டத்துக்கு தயாராகும் படக்குழு!

விக்ரம் படத்தின் 100வது நாள்.. கலைவாணர் அரங்கில் கொண்டாட்டத்துக்கு தயாராகும் படக்குழு!

கமல்

கமல்

விக்ரமின் 100வது நாள் விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட படக்குழு திட்டமிட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வசூலில் பட்டையைக்கிளப்பிய திரைப்படம் விக்ரம்.

  இந்த திரைப்படம் கடந்த ஜூன் 3ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாஸில் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

  ஜிபி முத்து முகத்துல அப்படியொரு சந்தோஷம்.. மனைவி, குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடினார்!

  சிறப்பு தோற்றத்தில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் நடித்த சூர்யா ரசிகர்களை கவர்ந்தார். மேலும் படத்தில் நரேன், காளிதாஸ் ஜெயராம், செம்பன் வினோத் ஜோஸ், காயத்ரி சங்கர், சுவதிஷ்தா கிருஷ்ணன், சந்தான பாரதி, இளங்கோ குமரவேல், அருள்தாஸ், மகேஸ்வரி சாணக்கியன், ஷிவானி நாராயணன், மைனா நந்தினி உள்ளிட்டோர் படத்தில் இடம் பெற்றிருந்தனர்.

  அனிருத் இசையில் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் நல்ல வரவேற்பை பெற்றது. சுமார் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட விக்ரம் திரைப்படம் ரூ. 440 கோடிக்கும் அதிகமாக வசூலை அள்ளியது. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும், சர்வதேச திரைப்பட விழாக்களிலும் விக்ரம் படம் கவனம் பெற்றது.

  இந்நிலையில் வரும் 7ம் தேதி விக்ரமின் 100வது நாள் விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட படக்குழு திட்டமிட்டுள்ளது. அன்று கமல்ஹாசன் பிறந்தநாள் என்பதாலும் பெரிய விழாவாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர் .

  அதன்படி நவம்பர் 7ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் விக்ரம் படத்தின் 100வது நாள் விழா கொண்டாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளையும் படக்குழு செய்து வருகின்றனர்


  Published by:Murugadoss C
  First published:

  Tags: Kamal Haasan, Vikram