• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விக்ரமின் 'மகான்' திரையரங்கில் வெளியாகும் - பிரபல தயாரிப்பாளர் நம்பிக்கை

விக்ரமின் 'மகான்' திரையரங்கில் வெளியாகும் - பிரபல தயாரிப்பாளர் நம்பிக்கை

மகான் திரைப்படம்

மகான் திரைப்படம்

Mahaan Movie : திரையரங்கில் வெளியாகுமா மகான் திரைப்படம் ?

  • Share this:
விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் இணைந்து நடித்திருக்கும் மகான் ஓடிடியில் வெளியாகும் என்று வதந்தி கிளம்பிய நிலையில், படம் திரையரங்கில் வெளியாகும் என பிரபல தயாரிப்பாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜகமே தந்திரத்துக்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் படம் மகான். விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதல்முறையாக இதில் இணைந்து நடித்துள்ளனர். வாணி போஜன், சிம்ரன், பாபி சிம்ஹா என மேலும் பலர் படத்தில் உள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ படத்தை தயாரித்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜின் ஜகமே தந்திரம் ஓடிடியில் வெளியானதால் பிழைத்தது. தனுஷ் ரசிகர்களுக்கே படம் பிடிக்கவில்லை. மகானையும் பாதுகாப்பாக ஓடிடியில் வெளியிடவே முயற்சிகள் நடந்தன. இந்நிலையில் தயாரிப்பாளர் தனஞ்செயன் இணைய உரையாடல் ஒன்றில் மகான் கண்டிப்பாக திரையரங்கில் வெளியாகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

also read : எனிமி நஷ்டம்... விஷால் படத்தை தயாரிக்க தயங்கும் மினி ஸ்டுடியோ?

அவர் சொல்வது உண்மையாக இருந்தால் விக்ரம் ரசிகர்களுக்கு இது நற்செய்தி.படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்ததால் மகான் 2022 பொங்கலை முன்னிட்டு அல்லது ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாகலாம் என்கிறார்கள். கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு திரைப்பட வர்த்தகம் முன்பைவிட நிலையற்றதாக மாறியுள்ளது. மகான் கடைசி நேரத்தில் ஓடிடியில் வெளியானாலும் ஆச்சரியமில்லை என்பதே கள யதார்த்தம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: