விக்ரம், அவரது மகன் துருவ் நடிப்பில் வெளிவந்த மகான் படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
விக்ரம், துருவ், பாபி சிம்ஹா, சிம்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான மகான் திரைப்படம் கடந்த பிப்ரவரி 10-ம்தேதி வெளியானது. திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் படத்தை வெளியிட்டிருந்தனர்.
விக்ரமின் 60வது படம், அப்பா மகன் நடிப்பில் முதல் படம், கார்த்திக் சுப்பராஜின் இயக்கம் உள்ளிட்டவைகளால் படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பை வைத்திருந்தனர்.
இதனை நிறைவேற்றும் வகையில் மகான் திரைப்படம் அமைந்திருந்தது. பெரும்பாலான ரசிகர்களை திருப்திபடுத்திய இந்த திரைப்படம் ஓடிடி ஸ்ட்ரீமிங்கிலும் சாதனை படைத்தது.
இதையும் படிங்க - Nenjukku Needhi: ரசிகர்களின் வாழ்த்து மழையில் உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி!
காந்தியவாதி அப்பாவுக்கு பிறந்த காந்தி மகான் என்ற விக்ரம், எப்படி சாராய சக்கரவர்த்தியாக, கேங்ஸ்டராக மாறுகிறார் என்பதுதான் படத்தின் கதை. இதனை நட்பு, துரோகம், அப்பா மகன் பாசம், காதல், சென்டிமென்ட் என பலவற்றையும் புகுத்தி, படத்தை ரசிக்கும்படி அமைத்திருப்பார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.
இதையும் படிங்க - நெஞ்சுக்கு நீதி படத்தினை பார்க்க இரவு முதலே திரையரங்கில் குவிந்த ரசிகர்கள்
படம் வெளியாகி 100 நாட்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில், அதில் நீக்கப்பட்ட 3 காட்சிகளை தயாரிப்பு குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அதில் ஒன்றாக பிரபல நடிகை வானி போஜன் இடம்பெறும் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. மகான் படத்தில் வானிபோஜன் தொடர்பான காட்சிகளை முழுமைப்படுத்த முடியாத காரணத்தால் அவை படத்திலிருந்து நீக்கப்பட்டதாக படக்குழுவினர் விளக்கம் அளித்திருந்தனர்.
மகான் படத்தில் நீக்கப்பட்ட காட்சிகளை பார்க்க…
விக்ரம் தற்போது கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களின் வெளியீட்டை எதிர்நோக்கியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.