முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Chiyaan 61: பா.ரஞ்சித்துடன் இணையும் விக்ரம்! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Chiyaan 61: பா.ரஞ்சித்துடன் இணையும் விக்ரம்! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சியான் 61

சியான் 61

ரஞ்சித் - விக்ரம் இணையும் சியான் 61 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எனத் தெரிகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நடிகர் விக்ரமுடன் இயக்குநர் பா.ரஞ்சித் இணைவது உறுதியாகியிருக்கிறது.

இயக்குநர் வெங்கட் பிரபுவின் உதவியாளராக இருந்த ரஞ்சித், அட்டகத்தி, மெட்ராஸ் படங்களில் கவனம் ஈர்த்தார். இதையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா ஆகியப் படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக உயர்ந்தார். சமீபத்தில் அவரது இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றது. குத்துச்சண்டையை மையமாக வைத்து இயக்கப்பட்டிருந்த இந்தப் படத்தில் ஆர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதையடுத்து காளிதாஸ் ஜெயராம், அசோக் செல்வன், துஷரா விஜயன் ஆகியோர் நடிப்பில் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை எடுத்து வருகிறார் ரஞ்சித். இதற்கடுத்து நடிகர் விக்ரமை வைத்து தனது அடுத்தப் படத்தை அவர் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. தற்போது இந்த செய்தி உறுதியாகியிருக்கிறது.

விக்ரமின் 61-வது படமாக உருவாகும் இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. சியான் 61 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்து விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

விக்ரம் தற்போது கோப்ரா, துருவ நட்சத்திரம், மஹான் ஆகியப் படங்களில் நடித்து முடித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் போஸ்ட் புரொடக்‌ஷனில் உள்ளது. இதையடுத்து அவர் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கும் அடுத்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எனத் தெரிகிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor Vikram, Pa. ranjith