முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Ponniyin Selvan: தஞ்சையில் ரசிகர்களை சந்திக்கும் விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா!

Ponniyin Selvan: தஞ்சையில் ரசிகர்களை சந்திக்கும் விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா!

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

சியான் விக்ரம் மற்றும் த்ரிஷா ஆகியோர் 'பொன்னியின் செல்வன்' படத்தில் தங்களின் கதாபாத்திர பெயர்களை ட்விட்டர் பெயர்களாக மாற்றியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொன்னியின் செல்வன் புரொமோஷனுக்காக தஞ்சை செல்லும் விக்ரம், த்ரிஷா, ஜெயம் ரவி மூவரும் அங்கு ரசிகர்களை சந்திப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் 'பொன்னியின் செல்வன்'. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகிறது. மேலும் படம் ஏற்கனவே திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதற்கிடையே 'பொன்னியின் செல்வன்' குழுவைச் சேர்ந்த சியான் விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா ஆகியோர் தஞ்சாவூரில் விரைவில் ரசிகர்களை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தஞ்சாவூரில் உள்ள பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலில் இவர்கள் மூவரும் ரசிகர்களை சந்திக்க உள்ளனர். தஞ்சாவூரைச் சேர்ந்த ரசிகர்கள் அவர்களுக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கத் தயாராகிவிட்டனர்.

'பொன்னியின் செல்வன்' சோழ சாம்ராஜ்யத்தின் கதையைச் சொல்கிறது. மேலும் சோழர்களின் தலைநகரம் தஞ்சாவூர் என்பதால், படத்தின் கதை அதை சுற்றியே நகரும். பொன்னியின் செல்வன் ரிலீஸுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளதால், படத்தின் விளம்பரப் பயணத்தை தயாரிப்பாளர்கள் தொடங்கியுள்ளனர். குறிப்பாக புரொமோஷனை தஞ்சாவூரில் இருந்து தொடங்க முடிவு செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வெந்து தணிந்தது காடு தெலுங்கு பதிப்பு நாளை வெளியாகாது...

இதற்கிடையில், சியான் விக்ரம் மற்றும் த்ரிஷா ஆகியோர் 'பொன்னியின் செல்வன்' படத்தில் தங்களின் கதாபாத்திர பெயர்களை ட்விட்டர் பெயர்களாக மாற்றியுள்ளனர். படம் வெளியாகும் வரை அடுத்த 15 நாட்களுக்கு 'பொன்னியின் செல்வன்' படக்குழுவினர் பல்வேறு இடங்களுக்குச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குழு வடமாநிலங்களுக்குச் செல்லும் போது ஐஸ்வர்யா ராய் பச்சன் புரொமோஷனில் கலந்து கொள்வார். பொன்னியின் செல்வன் ஐந்து மொழிகளில் வெளியாகிறது. மேலும் படம் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Actor Jayam Ravi, Actor Vikram, Actress Trisha, Ponniyin selvan