Home /News /entertainment /

கமல் ஹாசனின் விக்ரம் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

கமல் ஹாசனின் விக்ரம் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

கமல் ஹாசன்

கமல் ஹாசன்

சமீபத்தில் விக்ரம் படத்தின் 110 நாள் படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

    நடிகர் கமல் ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகியப் படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். அவரது இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் தொடங்கப்பட்ட திரைப்படம் விக்ரம். மூன்று முன்னணி கதாநாயகர்கள் ஒன்றிணைந்து நடிப்பதால் விக்ரம் படத்திற்கு இந்திய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது.

    இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்தார். கொரோனா பெருந்தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக விக்ரம் படப்பிடிப்பு தடை பட்டது. அதன் பிறகு கமலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது, இதனாலும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது.

    பின்னர் வெளியூரில் படமாக்கப்பட வேண்டிய காட்சிகளை சென்னையில் செட் அமைத்து படமாக்கினர். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய காரணத்தாலும், விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது. இதனால் சமீபத்தில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து விலகினார் கமல்.



    இப்படி செய்யலாமா? குற்றவாளியாக நிற்கும் மணிமேகலை ஹுசைன் - ட்ரெண்டாகும் வீடியோ!

    சமீபத்தில் விக்ரம் படத்தின் 110 நாள் படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து படம் எப்போது வெளியாகும் என காத்திருந்தனர் ரசிகர்கள். அதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது. அதாவது விக்ரம் திரைப்படம் ஜூன் 3-ம் தேதி வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.



    சூர்யாவின் தம்பி கார்த்தி தெரியும்... இன்னொரு தம்பியைப் பற்றி தெரியுமா?

    இதனை ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் கமல் ஹாசன், ”நானும் உங்கள் முன் சமர்ப்பிக்க ஆவலாய் காத்திருக்கும் "விக்ரம்" உலகின் சிறந்த திரை அரங்குகளில் ஜூன் 3ஆம் தேதி முதல்” என்று குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Kamal Haasan, Lokesh Kanagaraj, Vikram

    அடுத்த செய்தி