ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

VIKRAM : பிரபலங்கள் பார்வையில் விக்ரம்.. ’பார்ட் 3 ’ வேண்டுமாம்!

VIKRAM : பிரபலங்கள் பார்வையில் விக்ரம்.. ’பார்ட் 3 ’ வேண்டுமாம்!

விக்ரம்

விக்ரம்

சினிமா பிரபலங்களும் இன்று விக்ரம் படத்தை தியேட்டரில் பார்த்து ரசித்து இருக்கிறார்கள்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  உலகம் முழுவதும் இன்று விக்ரம் திரைப்படம் வெளியாகியுள்ளது. ரிலீஸூக்கு முன்பே படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்தது. உலகநாயகன் கமல்ஹாசன் 4 வருடங்களுக்கு பிறகு பெரிய திரையில் வர போகிறார், அவருடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ், சிறப்பு தோற்றமாக சூர்யா என ஏகப்பட்ட வாவ் விஷயங்கள் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரிக்க செய்தன. இதை எல்லாம் தாண்டி பான் இந்தியா மூவிக்காக விக்ரம் திரைக்கு வருவதால் எல்லோரின் கவனமும் விக்ரம் பக்கம் திரும்பியது.

  இந்நிலையில் திட்டமிட்டப்படி விக்ரம் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இணையத்தில் வைரலாகும் தகவலின் படி, விக்ரம் படம் சூப்பர் டூப்பர் ஹிட், உலக நாயகன் சம்பவம் பண்ணி இருக்காரு, லோகேஷ் ஃபேன் பாய் மொமண்ட் என ரசிகர்கள் ஆர்ப்பரிப்பதை பார்க்க முடிகிறது. வெறும் ரசிகர்கள் மட்டுமில்லை சினிமா பிரபலங்களும் இன்று விக்ரம் படத்தை தியேட்டரில் பார்த்து ரசித்து இருக்கிறார்கள். படத்தை பார்த்த உடனே தங்களது சமூகவலைத்தள பக்கத்தில் விக்ரம் குறித்த அனுபவத்தை ஷேர் செய்துள்ளனர். அவை எல்லாவற்றையும்  சேர்த்து ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.

  Vikram Review: கமல்ஹாசனின் விக்ரம் படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம்!

  பிரபலங்கள் பார்வையில் விக்ரம் :

  நடிகர் சாந்தனு :

  நடிகர் சாந்தனு விக்ரம் படக்குழுவுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார். அதுமட்டுமில்லை கமல்ஹாசனை ’மான்ஸ்ட’ர் என புகந்துள்ளார். லோகேஷ் கனகராஜின் ரைட்டப்பையும் பாராட்டி புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.

  நடிகர் ஹரிஷ் கல்யாண் :

  விக்ரம் படக்குழுவுக்கு நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது வாழ்த்துக்களை ஷேர் செய்துள்ளார்.

  நடிகர் ஜெயம் ரவி :

  நடிகர் ஜெயம் ரவி கமல்ஹாசன், லோகேஷ், சூர்யா, விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் அனைவரையும் ட்விட்டரில் டேக் செய்து தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்,

  நடிகர் சிவகார்த்திகேயன் :

  4 வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசனை திரையில் பார்ப்பது மிகுந்த சந்தோஷம் என கூறி தனது வாழ்த்துக்களை படகுழுவுக்கு தெரிவித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Actor Surya, Actor Vijay Sethupathi, Actor Vikram, Kamalhaasan, Kollywood, Lokesh Kanagaraj