விக்ரம் ரசிகர் கொலை.. 7 பேருக்கு ஆயுள் தண்டனை...!

news18
Updated: August 6, 2019, 2:36 PM IST
விக்ரம் ரசிகர் கொலை.. 7 பேருக்கு ஆயுள் தண்டனை...!
மாதிரி படம்
news18
Updated: August 6, 2019, 2:36 PM IST
ரசிகர் மன்ற பேனர் வைப்பதில் ஒருவர் கொலைசெய்யப்பட்ட வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல்லை அடுத்துள்ள தூசூர் கிராமத்தில் கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், விக்ரம் ரசிகர் மன்ற பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் கட்டட தொழிலாளி மணிகண்டன் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் இறந்து போன மணிகண்டனின் நண்பர்கள் அஜித்குமார், பழனிசாமி இருவரும் நாமக்கல் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் வழக்கு பதியப்பட்டு நாமக்கல் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.


இந்த வழக்கில் அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு குழுவினர் இந்த கொலையில் குற்றவாளிகளாக அறிவிக்கபட்டனர். இதில் ராமச்சந்திரன் , ரவிச்சந்திரன், ரகுமான், தனபால், ராஜேஷ் , மணிகண்டன் , கருணா மூர்த்தி ஆகிய 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 8 வது குற்றவாளியாக குற்றம்சாட்ட கிருஷ்ணமூர்த்தி என்பவர் சிறார் என்பதால் அவர் விடுவிக்கப்பட்டார்.

வீடியோ பார்க்க: கோமாளி பட சர்ச்சை தொடர்பாக ஐசரி கணேஷ் விளக்கம்
First published: August 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...