ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தமிழ் சினிமாவில் புதிய முயற்சியை கையில் எடுத்த லோகேஷ் கனகராஜ்… தொடர் வெற்றி சாத்தியமாகுமா?

தமிழ் சினிமாவில் புதிய முயற்சியை கையில் எடுத்த லோகேஷ் கனகராஜ்… தொடர் வெற்றி சாத்தியமாகுமா?

கமலுடன் லோகேஷ் கனகராஜ்

கமலுடன் லோகேஷ் கனகராஜ்

Lokesh Kanagaraj : இனி வரும் காலங்களில் லோகேஷ் தன்னுடைய படங்களின் சம்பவங்களை அடுத்த கதையுடன் தொடர்பு படுத்தினால் அது Movie Franchise-ஆக மாறும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி இருக்கும் விக்ரம் திரைப்படம் மூலமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Movie Franchise முறையை முயற்சித்துள்ளார். இது வெற்றியடையுமா என்பது குறித்து பார்க்கலாம்.

ஹாலிவுட் சினிமாக்களில் ஒரு படத்தின் கதை சம்பந்தமே இல்லாத வேறு ஒரு திரைப்படத்தில் தொடர்வது, மார்வெல் திரைப்படங்களில் இடம்பெறும் சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்கள் இணைந்து நடிப்பது போன்றவை வழக்கமான ஒன்று.  இதை நம் தமிழ் ரசிகர்களும் பல படங்களில் பார்த்து பழகியுள்ளனர்.

இந்த முறையை தமிழ் சினிமாக்களில் பெரிதாக கையாண்டது கிடையாது.  இந்தநிலையில் கமல்ஹாசன் தயாரித்து நடித்து வெளியாகியிருக்கும் விக்ரம் திரைப்படத்தில் அந்த முறையை லோகேஷ் கனகராஜ் முயற்சித்திருக்கிறார்.

2019-ம் ஆண்டு அவர் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த கைதி திரைப்படத்தின் சம்பவங்களையும், அதில் இடம்பெறும் கதாபாத்திரங்களையும் விக்ரம் படத்துடன் தொடர்புபடுத்தி இருக்கிறார். குறிப்பாக கைதி திரைப்படத்தின் முடிவிற்கு பின்பும், கைதி தொடக்கத்திற்கும் முன்பும் நடந்த சம்பவங்கள் மற்றும் போதை பொருள் கடத்தல் போன்றவற்றை விக்ரம் திரைப்படத்தின் கதையுடன் இணைத்துள்ளார் லோகேஷ்.

Also read... 'நாயகன் மீண்டும் வர்றார்!' - கமல் ஹாசனின் நடிப்பில் நாம் கொண்டாடிய ஆக்ஷன் படங்கள்! 

லோகேஷ் கனகராஜின் இந்த முயற்சியை ரசிகர்கள் ஆதரித்துள்ளனர்.  அத்துடன் LokiUnivers எனவும் கொண்டாடி வருகின்றனர்.

கைதி, விக்ரம் ஆகிய படங்களை தொடர்பு படுத்தியதன் மூலம், Movie Franchise முறையை தமிழுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த முயற்சி நிச்சயம் வரவேற்கப்பட வேண்டும். அடுத்த தலைமுறை இயக்குனர்கள் துணிச்சலாக இது போன்ற விஷயங்களை கையாளுகிறார்கள். அதற்கு துணை நின்ற கமல்ஹாசனை பாராட்ட வேண்டும் என  பத்திரிகையாளர் பரத் கூறுகிறார்.

Movie Franchise ஒரு கதையை சுவாரஸ்யப்படுத்த வெற்றி படங்களின் கதாபாத்திரங்களை பயன்படுத்துகின்றனர். அந்த கதாபாத்திரங்களும் காட்சிகளும் இந்தப் படத்தில் வரும்போது ரசிகர்கள் கைதட்டுவார்கள். இந்த முறை புராணங்களிலேயே உள்ளது. ஆனால் இது போன்று அடுத்தடுத்து கதை எழுதுவது இயக்குனர்களுக்கும் எழுத்தாளருக்கும் சவாலாக இருக்கும் என கேபிள் சங்கர் கூறுகிறார்.

Also read... கர்ணன் படத்தை மிஞ்சிய தனுஷின் நானே வருவேன் டிஜிட்டல் விற்பனை  

1986-ம் ஆண்டு வெளியான விக்ரம் படத்தின் கதாபாத்திரத்தையே இந்தப் படத்தில் ஏஜெண்ட் விக்ரம் என பயன்படுத்தியுள்ளார். எனவே, கைதி மற்றும் விக்ரம் படங்கள் Brand-ஆக உருவாக வாய்ப்புள்ளது. அத்துடன் இந்தப் படத்தின் இறுதியில் கைதி-2 படத்திற்கான தொடக்கத்தையும் வைத்துள்ளார் லோகேஷ். அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இனி வரும் காலங்களில் லோகேஷ் தன்னுடைய படங்களின் சம்பவங்களை அடுத்த கதையுடன் தொடர்பு படுத்தினால் அது Movie Franchise-ஆக மாறும் என பத்திரிகையாளர்களும், விமர்சகர்களும் கூறுகின்றனர். மேலும் அது வெற்றிகரமாக தொடரும் பட்சத்தில் Universe கான்சப்டாக மாறவும் வாய்ப்பிருக்கிறது என தெரிவிக்கின்றனர்.

நியூஸ் 18 தமிழ்நாடு செய்திகளுக்காக  செந்தில்ராஜா

First published:

Tags: Lokesh Kanagaraj