• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Vikram: இரண்டு பாகங்களாக வெளியாகும் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’!

Vikram: இரண்டு பாகங்களாக வெளியாகும் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’!

விக்ரம்

விக்ரம்

‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தை வெளியிடுவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.

  • Share this:
    ’துருவ நட்சத்திரம்’ திரைப்படம் பாகுபலி படம் போன்று இரண்டு பாகங்களாக வெளியாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    விக்ரம் நடிப்பில் இயக்குநர் கெளதம் மேனன் இயக்கியுள்ள படம் துருவ நட்சத்திரம். மிகவும் எதிர்பார்க்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், பார்த்திபன், ரீது வர்மா, சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் வேலைகளை 2017-ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு, வெளிநாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    படத்தை 2018-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில பிரச்சினைகளால் தள்ளிப்போனது. பின்னர் 2019-ல் வெளியாகும் என்று எதிர்பார்த்தபோது அப்போதும் ரிலீஸாகவில்லை. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் வெளியாக இருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக மீண்டும் துருவ நட்சத்திரத்தின் வெளியீடு தள்ளிப்போனது.

    தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் சூழலில், ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தை வெளியிடுவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. இதையடுத்து படத்தின் நீளம் நான்கரை மணி நேரமாக இருப்பதால், பாகுபலி படத்தைப் போன்று இரண்டு பாகங்களாக வெளியிடலாம் என்ற முடிவில் படக்குழுவினர் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: