Home /News /entertainment /

விக்ரம் நடிப்பில் வெளியான மகான் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு…

விக்ரம் நடிப்பில் வெளியான மகான் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு…

மகான் திரைப்படத்தில் துருவ் - விக்ரம்

மகான் திரைப்படத்தில் துருவ் - விக்ரம்

12 நிமிடம் 45 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவில், படப்பிடிப்பு குறித்தும் கேரக்டர்கள் தொடர்பாகவும் படக்குழுவினர் விவரித்துள்ளனர்.

விக்ரம்  - துருவ் விக்ரம் நடிப்பில் உருவான மகான் திரைப்படம் இன்று 100-வது நாளை எட்டிய நிலையில், படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ சினிமா ரசிகர்களின் விருப்பங்களையும் பகிர்வுகளையும் பெற்று வருகிறது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கேங்ஸ்டர் திரைப்படமாக இந்தப் படம் எடுக்கப்பட்டது. இதில் அப்பா மகன் இடையே நடக்கும் பாசப் போராட்டம், பகை, பழிவாங்கும் உணர்வு உள்ளிட்டவை படத்தின் மையக்கருவாக அமைந்தன.

கேங்ஸ்டர், சாராய சக்கரவர்த்தியாக வரும் விக்ரமின் சாம்ராஜ்யத்தை அளிக்கும் போலீசாக, அவரது மகன் துருவ் நடித்திருப்பார்.

இதையும் படிங்க - கே.ஜி.எஃப். இயக்குனர் பிரசாந்த் நீலுடன் இணையும் ஜூனியர் என்.டி.ஆர்… ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

இந்த படம் கடந்த பிப்ரவரி மாதம் 10-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.

இதையும் படிங்க - ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்... லைக்ஸை குவிக்கும் வீடியோ!

படம் வெளியாகி இன்றுடன் 100வது நாளை எட்டியுள்ள நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.





12 நிமிடம் 45 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவில், படப்பிடிப்பு குறித்தும் கேரக்டர்கள் தொடர்பாகவும் படக்குழுவினர் விவரித்துள்ளனர். சினிமா ரசிகர்கள் குறிப்பாக விக்ரமின் ரசிகர்களை இந்த வீடியோ பெரிதும் கவரும் என்பதை உறுதியாக சொல்லலாம்.





முன்னதாக மகான் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் வெளியிடப்பட்டன. குறிப்பாக விக்ரம் – வாணி போஜன் இடையிலான காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.
Published by:Musthak
First published:

Tags: Actor Vikram, Dhruv Vikram, Karthik subbaraj

அடுத்த செய்தி