Kamal Haasan: ’எப்போதும் சிங்கம் நீங்கள்...’ கமல் ஹாசனின் 62 வருட திரை வாழ்க்கையை கொண்டாடும் ‘விக்ரம்’ குழுவினர்!

கமல் ஹாசன்

விக்ரம் படத்தில் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாசையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.

  • Share this:
    நடிகர் கமல் ஹாசன் திரையுலகில் நடிகராக அறிமுகமாகி 62 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக அவர் நடித்து வரும் விக்ரம் படக்குழுவினர் புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

    மாஸ்டர் திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது இயக்கி வரும் படம் ‘விக்ரம்’. இதில் கமல் ஹாசன் ஹீரோவாக நடிக்கிறார். விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.



    இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறுகிய காலத்தில் இதன் படப்பிடிப்பை நிறைவு செய்து திரைப்படத்தை வெளியிட படக்குழுவினர் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். அதோடு விக்ரம் படத்தில் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாசையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். அதே நேரத்தில் படத்தில் கதாநாயகி யார் என்பதை அறிவிக்காமல் ரகசியமாக வைத்துள்ளனர். இது ஒருபுறமிருக்க நடிகை ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு உள்ளதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் கமல் ஹாசன் நடிக்க வந்து 62 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, விக்ரம் படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் ‘ஒன்ஸ் எ லயன், ஆல்வேஸ் எ லயன்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: