• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Cobra: ஓடிடி-யில் வெளியாகிறதா விக்ரமின் கோப்ரா?

Cobra: ஓடிடி-யில் வெளியாகிறதா விக்ரமின் கோப்ரா?

விக்ரம்

விக்ரம்

சன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் படம், கோப்ரா. ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். கோப்ராவையும் வதந்தியின் நாக்குகள் தீண்டியுள்ளன.

  • Share this:
    சன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் படம், கோப்ரா. ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். கோப்ராவையும் வதந்தியின் நாக்குகள் தீண்டியுள்ளன.

    கொரோனா காலகட்டம் என்பதால் மாஸ்டர், சுல்தான், கர்ணன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் தவிர மற்ற படங்கள் திரையரங்குகளில் காற்று வாங்குகின்றன. தயாரிப்பாளர்கள் ஓடிடி, தொலைக்காட்சி என்று மாற்றுப் பாதையில் சிந்திக்க ஆரம்பித்துள்ளனர். பல படங்கள் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாயின. நாளை ’சர்பத்’ திரைப்படம் நேரடியாக கலர்ஸ் தொலைக்காட்சியில் வெளியாக உள்ளது.

    ராஜேஷ் எம். இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ’வணக்கம்டா மாப்ள’யும் தொலைக்காட்சியில் வெளியாகிறது. மோகன்லாலின் ’த்ரிஷ்யம் 2’, ஃபகத் பாசிலின் ’ஜோஜி’ என முன்னணி நடிகர்களின் படங்கள் திரையரங்கில் வெளியாகாமல் நேடியாக ஓடிடி தளங்களில் வெளியாகின.

    விக்ரமின் ’கோப்ரா’வும் அப்படி நேரடியாக நெட்பிளிக்ஸில் வெளியாவதாக நேற்று மாலையிலிருந்து ஒரு தகவல் உலாவி வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் திரையரங்கில் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு, அரசாணையை வெளியிட்ட நிலையில், நெட்பிளிக்ஸில் கோப்ரா என்ற வதந்தியை பலரும் உண்மை என்றே நம்பினர்.

    நல்லவேளையாக தயாரிப்பு நிறுவனமான சன் ஸ்கிரீன் ஸ்டுடியோ, ஃபேக் நியூஸ் என்று மறுப்பு தெரிவித்து இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதனால் விக்ரம் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: