நடிகர் விக்ரமின் ‘கோப்ரா’ படக்குழு வெளியிட்ட புதிய அப்டேட்..

கோப்ரா படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் விக்ரமின் ‘கோப்ரா’ படக்குழு வெளியிட்ட புதிய அப்டேட்..
கோப்ரா
  • Share this:
நடிகர் விக்ரம் கடாரம் கொண்டான் திரைப்படத்தை அடுத்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் இத்திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடிகராக அறிமுகமாகிறார். கடந்த பிப்ரவரி மாதத்தில் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் 7 கெட்டப்புகளில் விக்ரம் காட்சியளித்திருந்தார்.

மே மாதம் இத்திரைப்படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கோப்ரா படத்தின் படப்பிடிப்பு இன்னும் 25% மீதமிருப்பதாக செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது.

இந்நிலையில் படத்தின் முதல் பாடல் ஜூன் 29-ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்ற புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோப்ரா படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்து வருகிறார். அதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் சியான் 60 படத்தில் தனது மகன் துருவ் உடன் இணைந்து நடிக்க இருக்கிறார் விக்ரம்.
First published: June 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading