Home /News /entertainment /

விக்ரமின் கோப்ரா புதிய அப்டேட்...

விக்ரமின் கோப்ரா புதிய அப்டேட்...

கோப்ரா

கோப்ரா

Vikram Cobra Movie : கோப்ரா படத்தின் கதை சர்வதேசத்தன்மை வாய்ந்தது.

விக்ரம் நடிப்பில் பல வருடங்களாக அண்டர் புரொடக்ஷனில் இருக்கும் படங்களில் ஒன்று கோப்ரா. இந்தப் படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

விக்ரம் நடிப்பில் துருவநட்சத்திரம் படம் பல வருடங்கள் முன்பு ஆரம்பிக்கப்பட்டது. கௌதம் இயக்கம் என்பதால் படம் இன்னும் பல வருடங்கள்கூட தாமதமாகலாம். கோப்ரா படத்தை டிமான்டிக் காலணி, இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து எடுத்து வருகிறார். லலித்குமார் தயாரிப்பு. இந்தப் படமும் பல வருடங்களாக அண்டர்புரொடக்ஷனில் உள்ளது.

கோப்ரா படத்தின் கதை சர்வதேசத்தன்மை வாய்ந்தது. விக்ரம் பல கெட்டப்புகளில் வருகிறார். இயல்பாகவே பெரிய படம் என்பதால் அதிக நாள்கள் எடுக்கின்றன என்கிறார்கள். அத்துடன் சில காட்சிகளை படமாக்க இயக்குனர் திட்டமிட்டதைவிட அதிக நாள்களை எடுத்துக் கொள்வதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இதன் காரணமாக பட்ஜெட் எகிறுவது தயாரிப்பாளரை கவலைப்படுத்தியுள்ளது. இவையெல்லாம் படத்தின் தாமதத்துக்கு காரணம் என்கிறார்கள்.

also read : யானை படத்தின் டிஜிட்டல், சேட்டிலைட் உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்


இப்போது தயாரிப்பாளரும், இயக்குனரும் ஒரு தீர்மானத்துக்கு வந்துள்ளனர். இயக்குனர் சொல்லும் பட்ஜெட்டைவிட அதிகம் செலவானால், அதனை இயக்குனர் தனது சம்பளத்தில் கழித்துக் கொள்ள வேண்டும். இதற்கு இயக்குனர் ஒத்துக் கொண்டதால் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட காட்சிகளை பின்னி மில்லில் அரங்கு அமைத்து எடுத்து வருகிறார்கள்.கோப்ராவில் ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிக்குமார், முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வருகின்றனர். படத்தின் ஹைலைட்களில் ஒன்று, ரஹ்மான். அவர்தான் கோப்ராவுக்கு இசையமைக்கிறார்.

Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Actor Vikram

அடுத்த செய்தி