Home /News /entertainment /

Vikram Box Office Collection: தமிழகத்தில் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த முதல் தமிழ் படம்!

Vikram Box Office Collection: தமிழகத்தில் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த முதல் தமிழ் படம்!

விக்ரம் திரைப்படம்

விக்ரம் திரைப்படம்

Kamal Haasan Vikram Box Office Collection: இப்படத்தின் மொத்த வசூல் தமிழகத்தில் ரூ.200 கோடியை நெருங்கும் நிலையில், உலகம் முழுவதுமான வசூல் ரூ.450 கோடியை நெருங்குகிறது.

    Vikram Box Office Collection: தமிழகத்தில் 100 கோடிக்கும் மேல் வசூலித்த முதல் தமிழ் படம் என்ற பெருமையை கமல் ஹாசனின் விக்ரம் திரைப்படம் அடைந்துள்ளது.

    கமல்ஹாசனின் 'விக்ரம்' திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், பல்வேறு சாதனைகளை படைத்து பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பி வருகிறது. 'பாகுபலி 2' படத்தின் ஐந்தாண்டு கால சாதனையை முறியடித்து, தமிழகத்தில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை 'விக்ரம்' சமீபத்தில் படைத்தது. தற்போது 'விக்ரம்' படத்தின் தமிழ்நாட்டு ஷேர் 100 கோடியைத் தாண்டி வசூல் செய்து தயாரிப்பாளருக்கு அதிக லாபத்தைக் கொடுத்துள்ளது. அதோடு தமிழகத்தில் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த முதல் தமிழ் படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. அதன்படி, இப்படத்தின் மொத்த வசூல் தமிழகத்தில் ரூ.200 கோடியை நெருங்கும் நிலையில், உலகம் முழுவதுமான வசூல் ரூ.450 கோடியை நெருங்குகிறது.

    வதந்தி பரப்பாமல் அனுதாபம் கொள்ளுங்கள் - கணவர் மறைவு குறித்து நடிகை மீனா உருக்கம்!

    விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், நரேன், செம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராம் போன்ற பல திறமையான நட்சத்திரங்களுடன் நடிகர் கமல்ஹாசன் முக்கிய வேடங்களில் நடித்தது, படத்தை வேறு தளத்திற்கு கொண்டுச் சென்றிருந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதற்கிடையே, லோகேஷ் கனகராஜ் அனைத்து தலைமுறை பார்வையாளர்களையும் ஈர்க்கும் வகையில் மாஸ் அண்ட் கிளாஸ் காட்சிகளுடன் படத்தை கச்சிதமாக இயக்கியிருந்தார். அனிருத் ரவிச்சந்தரின் பின்னணி இசை படத்திற்கு மேலும் வலு சேர்த்தது. அதோடு படத்தின் ஒரிஜினல் ஒலிப்பதிவு விரைவில் வெளியிடப்பட உள்ளது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Kamal Haasan

    அடுத்த செய்தி