Home /News /entertainment /

Vikram Box Office Collection: படம் வெளியாகி 25 நாளில் கமல் ஹாசனின் விக்ரம் வசூலித்தது எவ்வளவு தெரியுமா?

Vikram Box Office Collection: படம் வெளியாகி 25 நாளில் கமல் ஹாசனின் விக்ரம் வசூலித்தது எவ்வளவு தெரியுமா?

விக்ரம் படத்தில் கமல்

விக்ரம் படத்தில் கமல்

Vikram 25th Day: படம் வெளியாகி ரசிகர்களிடமும், சினிமா ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றது.

    Vikram Box Office Collection: நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் சில வாரங்களுக்கு முன்பு வெளியான விக்ரம் திரைப்படம் 400 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிய ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சூர்யா, அர்ஜுன் தாஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கியமான துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் நான்கு வெவ்வேறு மொழிகளில் வெளியாகியது. இதனை முன்னிட்டு இந்தியா முழுவதும் தீவிர புரொமோஷனில் ஈடுபட்டார் கமல்.

    படம் வெளியாகி ரசிகர்களிடமும், சினிமா ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது படம் மாபெரும் வெற்றி பெற்றதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் கமல் ஹாசன். அதோடு விக்ரம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பல வசூல் சாதனைகளையும் புரிந்து வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சினிமாவில் அறிமுகமாகும் நடிகர் செந்திலின் மகன் மணிகண்ட பிரபு!



    விக்ரம் படம் வெளியாகி 25 நாட்களை தொட்டிருக்கும் நிலையில், இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 400-கோடி கிளப்பில் நுழைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அடுத்த இரண்டு வாரங்களுக்கு தமிழகத்தில் அதிகபட்ச திரையரங்குகளில் இப்படம் இருக்கும் என்கிறார்கள் சினிமா ரசிகர்கள். இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்களாம் கமலும், விக்ரம் படக்குழுவினரும்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Kamal Haasan, Vikram

    அடுத்த செய்தி