கமல் ஹாசனின் விக்ரம் திரைப்படம் வெளியாகி 20 நாட்களைக் கடந்த நிலையில் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிய ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சூர்யா, அர்ஜுன் தாஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கியமான துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் நான்கு வெவ்வேறு மொழிகளில் வெளியாகியது. இதனை முன்னிட்டு இந்தியா முழுவதும் தீவிர புரொமோஷனில் ஈடுபட்டார் கமல்.
படம் வெளியாகி ரசிகர்களிடமும், சினிமா ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது படம் மாபெரும் வெற்றி பெற்றதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் கமல் ஹாசன். அதோடு விக்ரம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பல வசூல் சாதனைகளையும் புரிந்து வருகிறது.
புதுப்பொண்ணு நயன்தாரா கையில் இப்படியொரு ரகசியமா?
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
படம் வெளியாகி 20 நாட்களைக் கடந்த நிலையில், தமிழக பாக்ஸ் ஆபிஸில் 150 கோடி ரூபாயும், இந்தியாவில் 250 கோடியும், உலகளவில் 350 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது. இதையடுத்து விரைவில் விக்ரம் திரைப்படம் 400 கோடி கிளப்பில் இணையும் எனத் தெரிகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.