Home /News /entertainment /

விஜய்யின் மாஸ்டர் வசூலை முறியடித்த கமலின் விக்ரம்… வசூல் எவ்வளவு தெரியுமா?

விஜய்யின் மாஸ்டர் வசூலை முறியடித்த கமலின் விக்ரம்… வசூல் எவ்வளவு தெரியுமா?

விக்ரம் - மாஸ்டர்

விக்ரம் - மாஸ்டர்

Master Vikram Box Office : அதேபோல் தமிழகத்தில் அதிக வசூல் செய்த விக்ரம், மாஸ்டர் படங்களில் இயக்குனர் என்ற பெருமை லோகேஷ் கனகராஜூக்கு கிடைத்துள்ளது.

விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் வசூல் சாதனையை விக்ரம் திரைப்படம் முறியடித்துள்ளது. தமிழகத்தில் அந்த திரைப்படம் நிகழ்த்திய வசூல் சாதனை குறித்த ஒரு தொகுப்பு.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்த விக்ரம் திரைப்படம் ஜூன் 3-ம் தேதி வெளியானது.  இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

விக்ரம் படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்க தொடங்கியது. இதன் காரணமாக ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் முதல் நாள் வசூலான 23 கோடி ரூபாயை நெருங்கியது. அதேபோல முதல் வார முடிவில் அண்ணாத்த, பீஸ்ட், வலிமை ஆகிய படங்களின் முதல் வசூல் சாதனையை முறியடித்தது.

இதையும் படிங்க - 'தாய் கிழவி' தனுஷ் - அனிருத் கூட்டணியில் 7 வருடங்களுக்கு பின் உருவான பாடல் வெளியீடு

முதல் மூன்று நாட்கள் பெரும் வசூலை ஈட்டியதால். விக்ரம் படம் நிச்சயம் தமிழகத்தில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்து சாதனை படைக்கும் என சினிமா துறையினர் கணித்தனர். அந்த வகையில் விக்ரம் வெளியாகி 25 நட்கள் கடந்த நிலையிலும் ரசிகர்கள் வருகை குறையமால் உள்ளது. அதுவும் சென்னை போன்ற நகரங்களில் நான்காவது வார இறுதி நாட்களில் அரங்கம் நிறைந்த காட்சிகள் திரையிடப்படுகின்றன.

விக்ரம் படம் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வருவதால் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. குறிப்பாக நடிகர் விஜயின் மாஸ்டர் பட வசூலை முறியடித்து, தமிழகத்தில் அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற பெயரை பெற்றுள்ளது விக்ரம்.

இதையும் படிங்க - ஜூலை 8-ஆம் தேதி வெளியாகிறது யோகி பாபுவின் ‘பன்னி குட்டி' படம்!

மாஸ்டர் திரைப்படம் 138 கோடி ரூபாய் வசூல் செய்தது. இதில் 70 - 30 என்ற விகிதத்தில் ஷேர் தொகை பிரிக்கப்பட்டது. அதன் காரணமாக மாஸ்டர் 82 கோடியே 30 லட்சம் ரூபாய் ஷேர் தொகை கிடைத்தது. இதன் மூலம் தமிழகத்தில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனை மாஸ்டர் வசம் இருந்தது.

இந்த நிலையில் விஜயின் மாஸ்டர் வசூலை கமல்ஹாசனின் விக்ரம் படம் முறியடித்துள்ளது. இந்த திரைப்படம் இதுவரை மட்டும் 165 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் 70 - 30 என்ற அடிப்படையில் 90 கோடி ரூபாய் ஷேர் தொகை கிடைத்துள்ளது. மேலும் வரும் நாட்களில் 5 முதல் 7 கோடி ரூபாய் வரை கூடுதல் வசூல் செய்யும் என திரைத்துறையினர் கூறுகின்றனர்.

விக்ரம் படத்தின் வசூல் மூலம் தமிழகத்தில் விஜய், அஜித், ரஜினிகாந்த் ஆகியோரை பின்னுக்கு தள்ளி அதிக வசூல் செய்த நாயகன் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார் கமல்ஹாசன். இது அவருடைய நீண்ட நாள் கனவு என அவருக்கு திரைத்துறையினர் கூறுகின்றனர். அதேபோல் தமிழகத்தில் அதிக வசூல் செய்த விக்ரம், மாஸ்டர் படங்களில் இயக்குனர் என்ற பெருமை லோகேஷ் கனகராஜூக்கு கிடைத்துள்ளது.

தமிழகத்தில் 165 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கும் விக்ரம் உலக அளவில் 410 கோடி ரூபாய் வசூலை கடந்திருப்பதாக கூறப்படுகிறது.

நியூஸ் 18 தமிழ்நாடு செய்திகளுக்காக செந்தில்ராஜா.
Published by:Musthak
First published:

Tags: Actor Vijay, Kamalhaasan, Vikram

அடுத்த செய்தி