முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 5 பாடல்களைக் கொண்ட ‘விக்ரம்’ படத்தின் ஆல்பம்… ட்ராக் லிஸ்ட்டை வெளியிட்டார் அனிருத்

5 பாடல்களைக் கொண்ட ‘விக்ரம்’ படத்தின் ஆல்பம்… ட்ராக் லிஸ்ட்டை வெளியிட்டார் அனிருத்

விக்ரம் படத்தில் கமலுடன், விஜய் சேதுபதி, பகத் பாசில், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

விக்ரம் படத்தில் கமலுடன், விஜய் சேதுபதி, பகத் பாசில், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

விக்ரம் படத்தில் கமலுடன், விஜய் சேதுபதி, பகத் பாசில், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

5 பாடல்களைக் கொண்டதாக விக்ரம் படத்தின் ஆல்பம் உருவாக்கப்பட்டுள்ளது. பாடல்களின் ட்ராக் லிஸ்ட்டை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார்.

இந்தாண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படம் உள்ளது. மாநகரம், கைதி, மாஸ்டர் என தொடர்ச்சியாக மெகா ஹிட் படங்களைக் கொடுத்தவரும், கமலின் தீவிர ரசிகருமான லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

அனிருத்தின் இசையில் படத்திலிருந்து வெளியான பத்தல பத்தல பாடல், ரசிர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீடு ஆகியவை சென்னை நேரு விளையாட்டரங்கத்தில் பிரமாண்டமாக தற்போது நடைபெற்று வருகிறது.

கமல் ஹாசனின் விக்ரம் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி, விஜய், சூர்யா? 

இதில் பங்கேற்குமாறு நடிகர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விக்ரம் படத்தில் கமலுடன், விஜய் சேதுபதி, பகத் பாசில், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் நடிகர் சூர்யா படத்தில் இடம்பெற்றுள்ளார்.

மல்டி ஹீரோக்கள் இந்தப் படத்தில் நடித்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது.

இந்நிலையில் இசை வெளியீட்டிற்கு முன்பாக ஆல்பத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களின் பட்டியலை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார்.

மொத்தம் 5 பாடல்களைக் கொண்டதாக விக்ரம் ஆல்பம் அமைக்கப்பட்டுள்ளது. பத்தல பத்தல என்ற பாடலை கமலே எழுதி, அவரே பாடியுள்ளார். போர்கண்ட சிங்கம் மற்றும் விக்ரம் டைட்டில் பாடலை விஷ்ணு எடாவனும், வேஸ்டட் மற்றும் ஒன்ஸ் அபான் ய டைம் பாடல்களை ஹெய்சன் பெர்க்கும் எழுதியுள்ளனர்.

கமல் எழுதி, பாடியுள்ள பத்தல பத்தல சாங்... 

' isDesktop="true" id="745845" youtubeid="9VpeTiz81gc" category="cinema">

இதில் போர்கண்ட சிங்கம் பாடலை ரவி ஜி பாட, மற்ற 3 பாடல்களை பாடியுள்ளார் அனிருத்.

First published:

Tags: Anirudh, Kamal Haasan