முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விக்ரம், மாஸ்டர் பட பாடலாசிரியர் மீது காதலி பரபரப்பு புகார்..!

விக்ரம், மாஸ்டர் பட பாடலாசிரியர் மீது காதலி பரபரப்பு புகார்..!

விஷ்ணு இடவன்

விஷ்ணு இடவன்

விக்ரம் திரைப்பட பாடலாசிரியர் விஷ்ணு இடவன் மீது இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்தில் இடம்பெற்ற போர் கண்ட சிங்கம் என்ற பாடலை எழுதியவர் விஷ்ணு இடவன். நாயகன் மீண்டும் வரான், பொளக்கட்டும் பற பற என முன்னணி நட்சத்திரங்களின் மாஸ் பாடல்களை இவர்தான் எழுதியிருந்தார்.

தொடர்ந்து, பல்வேறு திரைப்படங்களில் பாடல் எழுதி வளரும் இளம் பாடலாசிரியாராக இருந்து வருகிறார். சமீபத்தில் கூட டாடா திரைப்படத்தில் பாடல் எழுதியிருந்தார். மேலும் கத்தி, மாஸ்டர், விக்ரம் திரைப்படங்களில் இணை இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார்.

இவரும் இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்த நிலையில் அப்பெண் கர்ப்பமானதாக கூறப்படுகிறது. பின்னர் இருவருக்கும் இருவீட்டாரும் இணைந்து திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில் தற்போது விஷ்ணு இடவன் அப்பெண்ணைத் திருமணம் செய்ய மறுப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக அப்பெண் புகாரளித்துள்ளார்.

First published: