• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சீயான் 60 படத்தின் பெயர், ஃபர்ஸ்ட் லுக் வெளியானது...!

சீயான் 60 படத்தின் பெயர், ஃபர்ஸ்ட் லுக் வெளியானது...!

மகான்

மகான்

ஆதித்ய வர்மாவில் அறிமுகமான துருவ் விக்ரமுக்கு இது இரண்டாவது படம். இரண்டாவது படத்திலேயே தந்தையுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் இவர் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
விக்ரமின் 60 வது படத்தினை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வந்தார். விக்ரமின் மகன் துருவ் விக்ரமும் உடன் நடிப்பதால் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

இதன் படப்பிடிப்பு டார்நடிப்பதால்லிங்கில் நடந்தது. பிறகு இறுதிக்கட்ட படப்பிடிப்பை நேபாள் எல்லைப் பகுதியில் நடத்தினர். படப்பிடிப்பு அனேகமாக முடிந்த நிலையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று மாலை 6.30 மணிக்கு வெளியிட்டனர். படத்துக்கு மகான் என்று பெயர் வைத்துள்ளனர். பர்ஸ்ட் லுக் மற்றும் அதனுடன் வெளியான டீசரை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மகான் ஒரு கேங்ஸ்டர் படமென்றும், விக்ரம் இதில் நெகடிவ் சாயல் உள்ள கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆதித்ய வர்மாவில் அறிமுகமான துருவ் விக்ரமுக்கு இது இரண்டாவது படம். இரண்டாவது படத்திலேயே தந்தையுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் இவர் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது.

Also read... திரையரங்குகள் திறப்பது எப்போது? - அமைச்சர் பதில்!

மகானில் நாயகியாக சிம்ரன் நடித்துள்ளார். முக்கியமான வேடத்தில் பாபி சிம்ஹா. படத்துக்கு அனிருத் இசையமைப்பார் என அறிவித்து பிறகு அவரை மாற்றி சந்தோஷ் நாராயணனை ஒப்பந்தம் செய்தனர். மகானை 7 ஸ்கிரின் ஸ்டுடியோ லலித்குமார் தயாரித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: