Chiyaan 60: சியான் 60 டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் தேதி அறிவிப்பு!

சியான் 60

சியான் 60 படத்துக்கு இசையமைப்பார் அனிருத் என முதலில் அறிவித்தனர்.

  • Share this:
    விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்பாராஜ் இயக்கி வருகிறார். விக்ரமின் 60 வது படம் என்பதால், சீயான் 60 என குறிப்பிடப்படும் இந்தப் படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர்.

    சீயான் 60 திரைப்படம் ஒரு கேங்ஸ்டர் படமாக தயாராகிறது. ஆக்ஷன் காட்சிகள் நிறைந்ததாக இதனை கார்த்திக் சுப்பாராஜ் எடுத்து வருகிறார். விக்ரம் நெகடிவ் சாயல் கொண்ட கதாபாத்திரத்திலும், துருவ் விக்ரம் போலீசாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. இதன் முக்கிய காட்சிகள் டார்ஜிலிங்கில் படமாக்கப்பட்டன. தொடர்ந்து நேபாள் எல்லையில் படப்பிடிப்பை நிறைவு செய்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் படத்தை தயாரிக்கிறார். சியான் 60 படத்துக்கு இசையமைப்பார் அனிருத் என முதலில் அறிவித்தனர். பிறகு அவரை மாற்றிவிட்டு கார்த்திக் சுப்பாராஜின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனை ஒப்பந்தம் செய்தனர்.

    karthik subbaraj, vikram 60, vikram dhruv vikram movie, vikram next movie, director karthik subbaraj, karthik subbaraj age, karthik subbaraj father, karthik subbaraj wife, karthik subbaraj instagram, karthik subbaraj upcoming movies, karthik subbaraj salary, karthik subbaraj net worth, கார்த்திக் சுப்பராஜ், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், கார்த்திக் சுப்பராஜ் வயது, கார்த்திக் சுப்பராஜ் தந்தை, கார்த்திக் சுப்பராஜ் மனைவி, கார்த்திக் சுப்பராஜ் இன்ஸ்டாகிராம், விக்ரம், துருவ் விக்ரம், விக்ரம் அடுத்தப்படம், chiyaan 60, chiyaan 60, chiyaan 60 first look, chiyaan 60 title, chiyaan 60 title release
    சியான் 60


    கார்த்திக் சுப்பாராஜின் கடைசிப்படம் ஜெகமே தந்திரம் ஏமாற்றமளித்தது. விக்ரம், துருவ் விக்ரமின் படங்களும் ரசிகர்களை கவரவில்லை. மூவருக்கும் ஒரு வெற்றி அவசியம் என்ற நிலையில் சீயான் 60 படம் தயாராகி வருகிறது. இதன் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக்கை வரும் 20-ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். இந்த வருடமே படம் திரைக்கு வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: