• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • திரையரங்கில் வெளியாவதில் சிக்கல்... நேரடியாக ஓடிடியில் வெளியாகும் விக்ரமின் மகான்...?

திரையரங்கில் வெளியாவதில் சிக்கல்... நேரடியாக ஓடிடியில் வெளியாகும் விக்ரமின் மகான்...?

மகான்

மகான்

மகானில் வாணி போஜன், சிம்ரன், பாபி சிம்ஹா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் மகான். கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என கூறப்படுகிறது.

விக்ரம் நடித்த படத்தை திரையரங்கில் பார்க்கவே ரசிகர்கள் விரும்புவர். விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் அதுவே மகிழ்ச்சி தரும் விஷயம். மகானில் விக்ரமுடன் அவரது மகனும் நடித்துள்ளார். திரையரங்கில் படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருப்பார்கள். ஆனால், கார்த்திக் சுப்புராஜின் பிராஃப் வேறு மாதிரி உள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் கடைசியாக இயக்கிய ஜகமே தந்திரம் நெட்பிளிக்ஸில் நேரடியாக வெளியானது. பெரும் பொருட்செலவில் தயாரான படம். தனுஷ் நாயகன். படத்தை அனைத்துத் தரப்பினரும் கழுவி ஊற்றினர். திரையரங்கில் வெளியாகியிருந்தால் நிச்சயம் தோல்வி கண்டிருக்கும். தயாரிப்பாளர் பல கோடிகள் நஷ்டத்தை சந்தித்திருப்பார். ஓடிடியில் வெளியிட்டதால் தயாரிப்பாளருக்கு கணிசமான லாபம் கிடைத்தது.

விஷாலின் எனிமி படத்தையும் ஓடிடியில் வெளியிடவே முதலில் முடிவு செய்திருந்தனர். படத்தின் பிரமோஷனின் போது பேசிய விஷால், நல்ல லாபத்துக்கு படத்தை ஓடிடியில் வெளியிட்டிருக்கலாம். ஆனால், தயாரிப்பாளர்தான் அது வேண்டாம் இந்தப் படத்தை திரையரங்கில்தான் வெளியிட வேண்டும் என்று முடிவு செய்து திரையரங்கில் வெளியிடுகிறார் என்றார். அதாவது தயாரிப்பாளர் ரிஸ்க் எடுத்திருக்கிறார் என்றார். அது உண்மையாகியிருக்கிறது. படம் தோல்வி. ஓடிடியில் வெளியிட்டிருந்தால் லாபம் பார்த்திருக்கலாம்

Also read... நேரடியாக ஓடிடியில் வெளியாகும் தெலுங்கு த்ரிஷ்யம் 2...!

மகான் படத்துக்கும் அப்படியொரு ரிஸ்க் எடுக்க வேண்டுமா என தயாரிப்பாளர் லலித் குமார் யோசிக்கிறார். படத்தை ஓடிடியில் வெளியிடும் எண்ணத்தில்தான் அவர் இப்போதுவரை இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த வருட ஆரம்பத்தில் மகான் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகலாம் என்பதே இன்றைய நிலை.

மகானில் வாணி போஜன், சிம்ரன், பாபி சிம்ஹா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். மரைக்கார் படம் ஓடிடியில் வெளியாக ஒப்பந்தமான பின் அரசின் தலையீட்டால் திரையரங்கில் வெளியாக இருப்பது போல் மகானிலும் ஏதாவது அதிசயம் நடக்காமலா போகும்?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: