‘திறவுகோல் மந்திரவாதி’... விக்ரம் - துருவ் இணையும் படத்தின் டைட்டிலா இது?

விக்ரம் - துருவ் இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘திறவுகோல் மந்திரவாதி’... விக்ரம் - துருவ் இணையும் படத்தின் டைட்டிலா இது?
சியான் 60
  • Share this:
கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்களைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது மகன் துருவ் உடன் இணைந்து நடிக்கிறார் விக்ரம். இந்தப் படம் அவரது 60-வது படம் என்பதால் சியான் 60 என்று தற்காலிகமாக அழைக்கப்படுகிறது.

லலித் குமார் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்தப் படத்துக்கு திறவுகோல் மந்திரவாதி என்ற டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

அதற்கு காரணம் கார்த்திக் சுப்புராஜின் விக்கிப்பீடியா பக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தின் பெயர் திறவுகோல் மந்திரவாதி என்று சிலர் குறிப்பிட்டுள்ளார். இதைப்பார்த்த பலர் படத்தின் தலைப்பு திறவுகோல் மந்திரவாதி என்ற தகவலைப் பரப்பினர்.


ஆனால் படக்குழு இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை. அதேசமயம் தற்போது விக்கிப்பீடியாவில்  ‘சியான் 60’ என்று மீண்டும் மாற்றப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் - துருவ் இணைந்து நடிப்பதால் இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு அதிகமான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க: கரகாட்டக்காரன் வெளியாகி 31 ஆண்டுகள் நிறைவு - வெங்கட் பிரபு மகிழ்ச்சி
First published: June 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading