Home /News /entertainment /

Ponniyin Selvan: கம்பீரமாக விக்ரம்... வரவேற்பைப் பெறும் பொன்னியின் செல்வன் ஆதித்ய கரிகாலன் லுக்!

Ponniyin Selvan: கம்பீரமாக விக்ரம்... வரவேற்பைப் பெறும் பொன்னியின் செல்வன் ஆதித்ய கரிகாலன் லுக்!

ஆதித்ய கரிகாலன்

ஆதித்ய கரிகாலன்

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெறும் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தை போஸ்டர் மூலம் அறிமுகம் செய்துள்ளார் இயக்குநர் மணிரத்னம். 

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர் விக்ரம் கதாபாத்திரத்தை புதிய போஸ்டர் மூலம் அறிமுகம் செய்துள்ளனர் படக்குழுவினர்.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அதே தலைப்பில் இயக்குனர் மணிரத்னம் திரைப்படமாக உருவாக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. அதில் முதல் பாகத்தை வரும் செப்டம்பர் 30-ம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் புரோமோஷன் வேலைகளை படக்குழுவினர் தொடங்கியுள்ளனர்.  அதில் ஆதித்ய கரிகாலனாக நடித்திருக்கும் நடிகர் விக்ரமின் கதாபாத்திரத்தை புதிய போஸ்டர் மூலம் அறிமுகம் செய்துள்ளனர். அந்த போஸ்டரில் போர்களத்தில் ஆதித்ய கரிகாலனான விக்ரம், குதிரை மீது அமர்ந்திருக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.

புஷ்பா தி ரூல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி?



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏற்கனவே லைக்கா நிறுவனத்தின் நிறுவனர் சுபாஸ்கரன் பிறந்தநாள் அன்று பொன்னியின் செல்வன் படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. ஆனால் அந்த போஸ்டர்களுக்கு எதிர்மறை விமர்சனமே கிடைத்தது. குறிப்பாக அதில் இடம்பெற்ற விக்ரமின் போஸ்டர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. ஆனால் இந்த முறை வெளியாகி இருக்கும் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தின் போஸ்டருக்கு, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து அருண்மொழித் தேவன்,  வந்திய தேவன், குந்தவை, நந்தினி உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களின் முதல் பார்வையும் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.
Published by:Shalini C
First published:

Tags: Actor Vikram, Mani ratnam, Tamil Cinema

அடுத்த செய்தி