ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

எதிர்பார்ப்பை எகிரவைக்கும் விக்ரம் 61 படத்தின் போஸ்டர் மற்றும் மேக்கிங் வீடியோ நாளை வெளியாகிறது... 

எதிர்பார்ப்பை எகிரவைக்கும் விக்ரம் 61 படத்தின் போஸ்டர் மற்றும் மேக்கிங் வீடியோ நாளை வெளியாகிறது... 

விக்ரம் 61

விக்ரம் 61

Vikram 61 Update | இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  இதன் மூலம் முதன் முறையாக பா.ரஞ்சித் மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் கூட்டணி அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

விக்ரம் 61 படத்தின் மேக்கிங் வீடியோ நாளை வெளியாகிறது. இந்த படத்தின் படபிடிப்பு தொடங்கியபோதும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்த லையில் தற்போது மேக்கிங் வீடியோவை வெளியிடுகின்றனர்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம் தற்போது பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 18ஆம் தேதி கடப்பாவில் தொடங்கியது. கோலார் தங்க வயலின் வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த திரைப்படத்தின் முக்கிய காட்சிகளை அங்கு படமாக்கி வருகின்றனர். அதில் விக்ரம் - பசுபதி உள்ளிட்டோரின் காட்சிகள் இடம்பெறுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் படத்தின் போஸ்டர் மற்றும் மேக்கிங் வீடியோ நாளை வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது .இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  இதன் மூலம் முதன் முறையாக பா.ரஞ்சித் மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் கூட்டணி அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்தப் படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் விக்ரம்-61 படத்தின் தகவல் மிக விரைவில் வெளியாவதாகவும் கூறியிருக்கிறார்.  மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பது சுவாரசியமாக இருக்கும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

Read More: எஸ்.பி.முத்துராமன் யூனிட்டுக்காக சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்த ரஜினி

இந்தப் படத்தில் நடிப்பதற்காக கடந்த சில மாதங்களாக நடிகர் விக்ரம் தன்னை தயார்படுத்தி வந்தார்.  கடந்த வாரம் சென்னை பூந்தமல்லிக்கு அருகே உள்ள ஈ.வி.பி ஸ்டுடியோவில் டெஸ்ட் ஷூட் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று முதல் படப்பிடிப்பை தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில் ரஞ்சித் - விக்ரம் இணைந்த இந்தப் படத்தில் நடிகை பார்வதி மற்றும் நடிகர் பசுபதி இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Published by:Srilekha A
First published:

Tags: Actor Vikram, Pa. ranjith