Home /News /entertainment /

Vikram 100 Days: திரையரங்குகளில் 100 நாட்களைக் கடந்த கமல் ஹாசனின் விக்ரம் - கொண்டாட்டத்தில் படக்குழுவினர்!

Vikram 100 Days: திரையரங்குகளில் 100 நாட்களைக் கடந்த கமல் ஹாசனின் விக்ரம் - கொண்டாட்டத்தில் படக்குழுவினர்!

விக்ரம் 100-வது நாள்

விக்ரம் 100-வது நாள்

விக்ரம் படத்தின் 100வது நாளை கொண்டாடும் படக்குழு. புதிய போஸ்டர்களை வெளியிட்டு உற்சாகம். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் 100-வது நாளை எட்டியுள்ளது. இதை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டவர் நடித்த விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் மூன்றாம் தேதி வெளியானது. இந்தத் திரைப்படம் வசூல் ரீதியில் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. அத்துடன் ரசிகர்களும் படத்தை வெகுவாக கொண்டாடினர்.

இந்த நிலையில் விக்ரம் திரைப்படம் வெளியாகி 100 நாட்கள் ஆகிறது. இதைப் படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக புதிய போஸ்டர்களை வெளியிட்டு கமல்ஹாசன் உள்ளிட்ட பட குழுவினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் தமிழகத்தில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெயரை பெற்றுள்ளது. இதுவரை தமிழகத்தில் 175 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதில் 92 கோடி ஷேர் தொகையாக கிடைத்துள்ளது எனவும் திரைத்துறையில் தெரிவிக்கின்றனர்.
Published by:Shalini C
First published:

Tags: Kamal Haasan, Lokesh Kanagaraj, Vijay sethupathi, Vikram

அடுத்த செய்தி