ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜயின் வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் எங்க எப்போ தெரியுமா? - வெளியானது மாஸ் அப்டேட்!

விஜயின் வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் எங்க எப்போ தெரியுமா? - வெளியானது மாஸ் அப்டேட்!

வாரிசு விஜய்

வாரிசு விஜய்

வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடலின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ நேற்று வெளியான நிலையில் நாளை முழு பாடலையும் படக்குழுவினர் வெளியிடுகின்றனர். 

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா துபாயில் டிசம்பர் 24ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இயக்குநர் வம்சி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார் விஜய். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் எமோஷனல், ஆக்‌ஷன், ரொமான்ஸ் என அனைத்தும் கலந்துக் கட்டி உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

    இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் தமன்.

    நீண்ட நாட்களாக படத்தின் முதல் சிங்கிளுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு நேற்று மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தது வாரிசு படக்குழு. அதன்படி நேற்று மாலை ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலின் ப்ரோமோ வெளியானது.

    விஜய் நடித்திருக்கும் வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. இந்த நிலையில் இறுதி கட்டப்பட பிடிப்பை விரைவில் சென்னையில் தொடங்குகின்றனர். அதில் சுமார் ஐந்து நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என கூறப்படுகிறது.

    இந்த நிலையில் படத்தின் ரஞ்சிதமே பாடலின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ நேற்று வெளியான நிலையில் நாளை முழு பாடலையும் படக்குழுவினர் வெளியிடுகின்றனர்.  அதே சமயம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை துபாயில் நடத்த திட்டமிட்டு இருக்கின்றனர். அதுவும் டிசம்பர் 24ஆம் தேதி துபாயில் வாரிசு படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடத்த தயாரிப்பாளர் தில் ராஜு திட்டமிட்டு இருக்கிறார்.

    Also read... 21 இடங்களை மார்க் செய்த சென்சார் போர்ட். சீன்களை வெட்டி ஒட்டிய லவ் டுடே படக்குழு..

    அதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. முதலில் திருப்பதி மற்றும் துபாய் ஆகிய இடங்களில் நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால் ஒரு இடத்தில் மட்டும் நடத்த இறுதியாக முடிவு எடுக்கப்பட்டது. அதில் டிசம்பர் 24 ஆம் தேதி துபாயில் நடத்துவது என திட்டமிட்டு இருக்கின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Actor Vijay