ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜயின் வாரிசு படத்திற்கு வந்த அடுத்த சிக்கல்... தயாரிப்பு நிறுவனத்திற்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ்!

விஜயின் வாரிசு படத்திற்கு வந்த அடுத்த சிக்கல்... தயாரிப்பு நிறுவனத்திற்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ்!

வாரிசு

வாரிசு

Performing Animals Registration Rules 2001-ன்கீழ் முன் அனுமதி பெறாமல் 5 யானைகளை பயன்படுத்தி காட்சிகள் படமாக்கப்பட்டதாக வந்த புகாருக்கு 7 நாட்களுக்குள் பதிலளிக்க தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவு.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் விஜயின் வாரிசு திரைபடதில் முன் அனுமதி பெறாமல் 5 யானைகளை சினிமாவில் பயன்படுத்தியது தொடர்பாக 7 நாளுக்குள் தயாரிப்பு நிறுவனம் பதில் அளிக்க விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இயக்குநர் வம்சி இயக்கும் 'வாரிசு' படத்தில் தற்போது நடித்து வருகிறார் விஜய். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. இதில் விஜய் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் தமன். இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரிசு படத்தின் படப்பிடிப்பு சென்னை திருவள்ளூர் மாவட்டங்களில் படமாக்கபட்டு வருகிறது. அதில் சமீபத்தில் 5 யானைகளை வைத்து காட்சி எடுக்கபட்டதாகவும், அந்த யானைகளை சினிமாவில் பயன்படுத்த விலங்குகள் நல வாரியத்தில் முன் அனுமதி பெற வேண்டும் என சட்டம் உள்ளது.

முன் அனுமதி பெறாமல் யானை பயன்படுத்தியதாக விலங்கு நல வாரியத்திற்க்கு புகார் வந்ததன் அடிப்படையில் விலங்குகள் நல வாரியம் வாரிசு பட தயாரிப்பு நிறுவனத்திற்க்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. பதில் அளிக்க மறுத்தால் வாரிய விதியின்படி நடவடிக்கைகள் பாயும் என்றும் எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

Also read... ஷூட்டிங்கே தொடங்கல.. அதுக்குள்ள இத்தனை கோடி வியாபாரமா? தளபதி67 குறித்து சூப்பர் அப்டேட்

வழக்கமாகவே சினிமா படத்திற்க்கு பயன்படுத்தபடும் விலங்குகளுக்கு விலங்குகள் நல வாரிய மருத்துவர் விலங்கின் செயல்பாட்டு தன்மை, சினிமாவிற்க்கு உகந்ததா, உடல் ஆரோக்கியம், பயிற்ச்சி பெற்ற விலங்கா என பரிசோதனை செய்து அனுமதி கடிதம் வழங்குவார். ஆனால் அனுமதி வாங்காமல் விலங்குகள் சினிமாவில் பயன்படுத்துவது வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972ன் படி குற்றமாகுமென குறிப்பிட்டு வாரிசு பட தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் நடிகர் விஜய் ரசிகர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Vijay