லீக் ஆனது விஜய் 63 ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ

தற்போது விஜய், நயன்தாரா சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

லீக் ஆனது விஜய் 63 ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ
விஜய்
  • News18
  • Last Updated: March 19, 2019, 7:32 AM IST
  • Share this:
விஜய் நடித்து வரும் தளபதி 63 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ லீக் ஆகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு இந்த கூட்டணி இணைந்துள்ளதால்  தளபதி 63 படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. விஜய்க்கு ஜோடியாக நயந்தாரா நடிக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். படம் தீபாவளிக்கு வெளிவரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் சூட்டிங் சென்னையில் பல இடங்களில் பிஸியாக நடைபெற்று வருகிறது. தற்போது விஜய், நயன்தாரா சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. விஜய், நயன்தாரா ஆகியோர் படப்பிடிப்பு தளத்திற்கு வரும்போது எடுக்கப்படும் போட்டோஸ் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


சமீபகாலமாக ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள் திருட்டுத்தனமாக படம் பிடிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் தளபதி 63 படத்தில் விஜய் நடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியாகியுள்ளனர்.
Also watch

First published: March 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்