‘தளபதி 63’ படத்தில் விஜய் மகன் நடித்திருக்கிறாரா?

‘தளபதி 63’  படத்தில் விஜய் மகன் நடித்திருக்கிறாரா?
ஜேசன் சஞ்சய் | விஜய்
  • News18
  • Last Updated: June 19, 2019, 12:21 PM IST
  • Share this:
‘தளபதி 63’ படத்தின் டப்பிங் ரெடி என்று விஜய் மகன் பெயரில் இருக்கும் ட்விட்டர் கணக்கில் கருத்து பதியப்பட்டுள்ளது.

தெறி, மெர்சல் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக விஜய் - அட்லி கூட்டணி அமைந்துள்ளது. விஜய்-ன் 63-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்துக்கு ‘தளபதி 63’ என்று தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில், விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். மேலும் அவர், தந்தை, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருப்பதாகவும், அதில் மகன் கேரக்டரின் பெயர் பிகில் என்றும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.


இந்நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் இசையமைபாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு, அதில் தோன்றும் நபர் யார் என்று தெரிகிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு ரசிகர்கள் சிலர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தான் அந்த நபர் என்று பதிலளித்துள்ளனர். மேலும் சிலர் வீடியோவில் தோன்றும் நபர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் என்று கூறியுள்ளனர்.இந்த வீடியோவுக்கு விஜய் மகன் பெயரில் இயங்கும் ட்விட்டர் கணக்கிலிருந்து நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த ட்விட்டர் பக்கத்தில் தளபதி 63 படத்தின் டப்பிங் ரெடி என்றும் கருத்து பதியப்பட்டுள்ளது.

இதனால் இதுவரை குறும்படங்கள் இயக்கி நடித்து வந்த விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ‘தளபதி 63’ படத்தில் நடித்திருக்கலாம் என்று பேசப்படுகிறது. ஆனால் படக்குழு இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.வீடியோ பார்க்க: தளபதி 28 - விஜய்க்கு ஹிட் கொடுத்த 28 இயக்குநர்கள்!

First published: June 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்