#OneYearOfBBSarkar... போட்டோ வெளியிட்டு கொண்டாடிய ஏ.ஆர்.முருகதாஸ்

news18
Updated: November 6, 2019, 8:43 AM IST
#OneYearOfBBSarkar... போட்டோ வெளியிட்டு கொண்டாடிய ஏ.ஆர்.முருகதாஸ்
விஜய்
news18
Updated: November 6, 2019, 8:43 AM IST
சர்கார் திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில் அதை சர்கார் படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் விஜய்யுடன் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்த படம் சர்கார். ஏற்கனவே துப்பாக்கி, கத்தி என 2 பிளாக்பஸ்டர் படங்களை இந்த கூட்டணி தந்ததால் 3-வது முறையாக சர்கார் படத்திற்காக இணைந்த போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.

சன் பிக்சர்ஸ், ஏ.ஆர்.ரகுமான் என பலமான கூட்டணி அமைந்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதலே நிலவி வந்தது. இந்நிலையில் படம் கடந்த ஆண்டு நவம்பர் 6-ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது.


சர்கார் படத்தின் மூலம், ’49 பி’ என்ற சட்டவாய்ப்பு மக்கள் மத்தியில் பிரபலமடைந்தது. வாக்காளர்களின் வாக்கை யாரேனும் கள்ள ஓட்டாக பதிவு செய்திருந்தால், நாம் மீண்டும் முறையிட்டு நம் வாக்கை பதிவு செய்துகொள்ளலாம் அதற்கான உரிமையை அளிப்பதுதான் ’49 பி’ பிரிவு.

இந்தப்படம் உலகம் முழுவதும் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. மெர்சல் படத்திற்கு பிறகு 250 கோடி வசூல் செய்த விஜய் படம் என்ற சாதனையை படைத்தது.

இந்நிலையில் படம் வெளியாகி ஓர் ஆண்டு ஆகியுள்ள நிலையில் அதை கொண்டாடும் விதமாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் #OneYearOfBBSarkar என்ற ஹேஷ்டேக்குடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Loading...




இதேபோல் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் சர்கார் முதல் ஆண்டை கொண்டாடும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.,



Also watch

First published: November 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...