விஜய்யின் அடுத்த பட இயக்குநர் இவரா?

விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் இணைந்தேன். மீண்டும் ஒரு படம் பண்ணுவேன்’ என்று இயக்குநர் மோகன் பேசியுள்ளார்

விஜய்யின் அடுத்த பட இயக்குநர் இவரா?
விஜய்
  • News18
  • Last Updated: March 9, 2019, 7:23 AM IST
  • Share this:
விஜய்யுடன் மீண்டும் இணைந்து படம் இயக்கப்போவதாக இயக்குநர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் தற்போது இயக்குநர் அட்லியுடன் கூட்டணி அமைத்து தனது 63-வது படத்தில் நடித்து வருகிறார். தெறி, மெர்சல் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்-அட்லி கூட்டணி அமைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, விவேக் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படம் தீபாவளிக்கு வெளிவரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் அடுத்த பட இயக்குநர் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் இருக்கிறது. உறுதி செய்யப்படாத தகவல்கள் என்றாலும் சில இயக்குநர்கள் விஜய்யுடன் கைகோர்க்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இயக்குநர் சிறுத்தை சிவா, மோகன் ராஜா உள்ளிட்டோரின் பெயர்களும் அடங்கும்.


இந்நிலையில் தனியார் கல்லூரி விழாவுக்கு சென்ற இயக்குநர் மோகன் ராஜா, ‘விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் இணைந்தேன். மீண்டும் ஒரு படம் பண்ணுவேன்’ என்று பேசியுள்ளார்.



ஏற்கனவே விஜய்யுடன், இயக்குநர் மோகன் ராஜா சந்தித்த போது விஜய்யை இயக்கப் போகிறாரா என கேள்விகள் எழுந்த நிலையில் அவர் பேசியிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் தான் ‘விஜய் 64’ படத்தை இயக்கப் போகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



Also Watch

First published: March 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்