முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Thalapathy 65-இல் விஜய்க்கு வில்லனாகிறாரா நவாஸுதீன் சித்திக்?

Thalapathy 65-இல் விஜய்க்கு வில்லனாகிறாரா நவாஸுதீன் சித்திக்?

நவாஸுதீன் சித்திக்

நவாஸுதீன் சித்திக்

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அடுத்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்துக்கு நவாஸுதீன் பொருத்தமாக இருப்பார் என கதைக்குழு தெரிவித்ததாகவும் PinkVilla தெரிவித்துள்ளது.

  • Last Updated :

நடிகர் விஜயின் 65-வது படத்தில் வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக்கியிடம் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக பிரபல சினிமா இணையதளமான PinkVilla செய்திகள் தெரிவிக்கிறது.  இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அடுத்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்துக்கு நவாஸுதீன் பொருத்தமாக இருப்பார் என கதைக்குழு தெரிவித்ததாகவும் PinkVilla ரிப்போர்ட் செய்துள்ளது.

டிசம்பர் 10-ஆம் தேதி, நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 65-ஐ சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அனிருத் ரவிச்சந்தர் இப்படத்தின் இசையமைப்பாளர் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள் மோகன் நடிப்பில் உருவான டாக்டர் திரைப்படம் மார்ச்சில் வெளியாகவுள்ளது.

top videos

    நவாஸுதீன் சித்திக் நடிக்கும் ஜோகிரா சாரா  ரா ரெயின் என்னும் பாலிவுட் திரைப்படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி 25-முதல் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Actor vijay, Nawazuddin Siddiqui, Nelson dilipkumar, Sacred games, Sivakarthikeyan, Vijay 65