தளபதி 63 படத்தில் விஜயின் பெயர் என்ன தெரியுமா?

பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில், விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார்.

தளபதி 63 படத்தில் விஜயின் பெயர் என்ன தெரியுமா?
விஜய் 63
  • News18
  • Last Updated: June 10, 2019, 3:40 PM IST
  • Share this:
விஜய் மற்றும் அட்லீ 3-வது முறையாக இணைந்துள்ள தளபதி 63 படத்தில் விஜய்யின் பெயர் என்ன என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தெறி, மெர்சல் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் - அட்லி கூட்டணி அமைந்துள்ளது. விஜய்-ன் 63-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்துக்கு ‘தளபதி 63’ என்று தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

Also read... இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியைக் கொண்டாட மேலாடையின்றி போட்டோ வெளியிட்ட நடிகை!


இவர்களுடன் கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, விவேக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், இந்தப் படத்தில் விஜய்யுடன் 12-வது முறையாக நடிகர் விவேக் இணைந்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில், விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். படம் தொடங்கும் போதே தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

Also read... இனிவரும் படங்களில் இதுபோன்று நடக்காது: புகைப்பிடிக்கும் காட்சிக்கு நடிகர் வருத்தம்!இந்நிலையில் விஜய்க்கு மைக்கேல் என்று படத்தில் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. மேலும் மகனாக நடிக்கும் விஜயின் பெயர் 'பிகில்' என்றும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

Also see...

First published: June 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்