‘மாஸ்டர்’ மூலம் நடிகராக அறிமுகமாகும் கதிரின் தந்தை

மாஸ்டர் படத்தின் மூலம் கதிரின் தந்தை லோகு நடிகராக அறிமுகமாகவுள்ளார்.

‘மாஸ்டர்’ மூலம் நடிகராக அறிமுகமாகும் கதிரின் தந்தை
தந்தையுடன் நடிகர் கதிர்
  • Share this:
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆன்ட்ரியா உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. கொரோனா பிரச்னை முடிவடைந்து நிலைமை சீரானவுடன் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் இந்தப் படம் குறித்து சுவாரஸ்யமான தகவல்கள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்தவகையில் நடிகர் கதிரின் தந்தை லோகு மாஸ்டர் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதை தனது ட்விட்டர் பக்க பதிவின் மூலம் உறுதிப்படுத்தியிருக்கும் கதிர், “இந்த இருவரின் பயணமும் எப்போதும் ஒரு ஊக்கமாக இருந்திருக்கிறது. அவர்களது ஆர்வமும் கனவும் தான் இன்று நான் நானாக இருப்பதற்கு காரணம். அவர்கள் தான் என் அம்மா, அப்பா. 53 ஆண்டுகளுக்கு பின்னர் எங்கள் மாஸ்டர் மூலம் அவர் நடிப்பதற்கான கனவு நனவாகியுள்ளது.

மிகவும் சிறிய காட்சியாக இருந்தாலும், அவருடைய கனவு நிறைவேறியுள்ளது. பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா. மகிழ்ச்சிக்கான நேரம் இது. உங்கள் கனவுகளை நனவாக்குங்கள்” இவ்வாறு கதிர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
First published: July 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading