விஜய் நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படத்தில் இடம்பெற்ற சிம்டாங்காரன் பாடலை பாடிய பம்பா பாக்யா மரணம் அடைந்தார். அவருக்கு வயது 42.
மெட்ராஸ் கிக் தனிப்பாடல்களில் ‘எதுக்கு உன்ன பாத்தேன்னு நெனைக்க வைக்குறியே..’ பாடல் மூலம் தமிழ் பாடல் உலகிற்கு அறிமுகம் ஆனவர் பம்பா பாக்கியா.
அதன் பின்னர் ரஹ்மான், ஹிப் ஹாப் ஆதி என்ன பல முன்னணி இசை அமைப்பாளர்கள் இசையில் பாடி வந்துள்ளார்.தமிழ் சினிமாவில் பின்னணி பாடகராக அறியப்படுபவர் பம்பா பாக்யா.
இவர் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்தில் ‘புள்ளினங்காள்’ பாடலை பாடினார். அதன் பிறகு ஏ.ஆர் ரகுமான் இசையில் பிகில் , சர்கார், சர்வம் தாளமயம், இரவின் நிழல் ஆகிய படங்களில் பாடியுள்ளார்.
This song is one of my favorite. Going to miss you sir #bambabakya #RIP sir. pic.twitter.com/fYyjal3Dsu
— Naveen (@imNaveenJD) September 2, 2022
விஜய் நடிப்பில் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் வெற்றி அடைந்த ‘சிம்டாங்காரன்’ பாடலை பம்பா பாக்கியா பாடினார். அதேபோல் மணிரத்னம் இயக்கத்தில் இந்த மாதம் வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தில் இவர் பாடியுள்ளார்.
இந்த நிலையில் 42 வயதாகும் பம்பா பாக்யா நேற்று மதியம் மாரடைப்பு ஏற்பட்டு அண்ணா நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதய துடிப்பு குறைந்து, சிறுநீரக செயல்பாடும் குறைந்து வயிற்றில் அதிக நீர் சேர்ந்துள்ளது. இதனால் பம்பா பாக்யா வேறு மருத்துவமனைக்கு மாற்ற திட்டமிட்டனர்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பம்பா பாக்யா நேற்று மரணம் அடைந்துள்ளார். அவருக்கு இசையமைப்பாளர் சங்க தலைவர் தீனா உள்ளிட்ட இசை துறையினர் மற்றும் திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: A.R.Rahman, Hip hop Tamizha, Singer