பிகில் படத்தின் ‘வெறித்தனம்’ பாடலும் கசிந்ததா?... ரசிகர்கள் கோபம்

news18
Updated: July 18, 2019, 6:44 PM IST
பிகில் படத்தின் ‘வெறித்தனம்’ பாடலும் கசிந்ததா?... ரசிகர்கள் கோபம்
பிகில்
news18
Updated: July 18, 2019, 6:44 PM IST
பிகில் படத்தில் விஜய் பாடிய பாடல் இணையத்தில் கசிந்ததாக வெளியான தகவலை அடுத்து விஜய் ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர்.

அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் பிகில். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். விஜயின் 63-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

‘பிகில்’ படப்பிடிப்பின்போதே பல்வேறு புகைப்படங்கள் வெளிவந்து படக்குழுவினருக்கு அதிர்ச்சியளித்து வந்த நிலையில், சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய ‘சிங்கப் பெண்ணே’ என்ற பாடல் வெளியாகி படக்குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.


இந்நிலையில் பிகில் படத்தில் விஜய் பாடிய வெறித்தனம் என்ற பாடலும் இணையத்தில் கசிந்ததாக தகவல் வெளியானது. 15 வினாடிகள் நீளம் கொண்ட ஆடியோ ஒன்று கசிந்திருப்பதாகவும், அதில் விஜய் குரல் இடம் பெற்றிருப்பதாகவும் ரசிகர்கள் பலர் தங்களது ட்விட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.அதேவேளையில், படத்தின் தயாரிப்பு நிறுவனம் கவனக் குறைவாக செயல்படுகிறதா என்று கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.வீடியோ பார்க்க: ஹாலிவுட் வரை நகரும் தனுஷின் திரைப்பயணம்... ஆனாலும், தமிழ்படங்கள் சிக்கலில்...! காரணம் என்ன?

First published: July 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...