பிகில் படத்தின் ''சிங்கப் பெண்ணே'' வீடியோ பாடல் வெளியீடு!

Web Desk | news18-tamil
Updated: November 8, 2019, 7:15 PM IST
Web Desk | news18-tamil
Updated: November 8, 2019, 7:15 PM IST
பிகில் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சிங்கப் பெண்ணே பாடல் வீடியோ வெளியாகி உள்ளது.

ராஜா ராணி, மெர்சல், தெறி ஆகிய படங்களை இயக்கிய அட்லீ, அடுத்ததாக விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் பிகில் திரைப்படத்தை இயக்கியுள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, ஆனந்தராஜ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படம் கடந்த 25-ம் தேதி வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களும் எழுந்தன.


மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - ஏ.ஆர்.ரஹ்மான் - அட்லீ கூட்டணி பிகில் படத்திலும் இணைந்தது. மேலும் இந்தப் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அவரே பாடிய சிங்கப்பெண் பாடல் ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் “சிங்கப் பெண்ணே“ பாடலின் வீடியோ தற்போது யூடியூபில் வெளியாகியுள்ளது.Also Watch

Loading...

First published: November 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...