பிகில் ஃபர்ஸ்ட் லுக்... விஜய் கூறியது என்ன? - சீக்ரெட் உடைத்த கோபி பிரசன்னா!

news18
Updated: June 24, 2019, 6:16 PM IST
பிகில் ஃபர்ஸ்ட் லுக்... விஜய் கூறியது என்ன? - சீக்ரெட் உடைத்த கோபி பிரசன்னா!
பிகில் | கோபி பிரசன்னா
news18
Updated: June 24, 2019, 6:16 PM IST
பிகில் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உருவான விதம் குறித்து டிசைனர் கோபி பிரசன்னா மனம் திறந்துள்ளார்.

தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பிகில். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில், விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு பிகில் படத்தின் மூன்று போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது. இந்தப் போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.


இந்நிலையில் இந்தப் போஸ்டர்களை வடிவமைத்த டிசைனர் கோபி பிரசன்னா, உருவானவிதம் குறித்து தனியார் இணையதள ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, “ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்ய வேண்டும் என்று நினைத்தோம். அதை செய்துவிட்டோம் என்று நினைக்கிறேன். ரசிகர்கள் எதிர்பார்த்ததை மட்டும் அப்படியே கொடுத்தால் போர் அடித்துவிடும். அதைத் தவிர்த்து ஒரு சர்ப்ரைஸ் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.Loading...

4 பேரை வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் போஸ்டர் அட்லீ கொடுத்த ஐடியா தான். இரவு 12 மணிக்கு வெளியான போஸ்டர் தான் ஃபர்ஸ்ட் லுக்காக வெளியாகும் என்று எதிர்பார்த்தோம்.

மதிய உணவுக்குப் பின்பு தான் அந்த வயதான கதாபாத்திரத்தில் அமர்ந்திருக்கும் விஜய்யை ஃபோட்டோ ஷூட் செய்தோம். அவர் அதற்கான கதாபாத்திரமாக அறைக்குள் வரும் போது அனைவரும் மிரண்டுபோய் விட்டோம்.

முதல் முயற்சியிலேயே  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை முடித்துவிட்டேன். சர்கார் பட ஃபர்ஸ்ட் லுக் வெளியாவதற்கு முன்பாகவே ‘பிகில்’ பட ஃபர்ஸ்ட் லுக் பணிகள் முடிவடைந்து விட்டன. ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த் நடிகர் விஜய், அமைதியாகப் பார்த்துவிட்டு நல்லா இருக்கு நண்பா என்று சொன்னார்” இவ்வாறு கோபி பிரசன்னா கூறியுள்ளார்.

வீடியோ பார்க்க: தளபதி விஜய்யின் பலருக்கும் தெரியாத 50 சுவாரஸ்ய விசயங்கள்!

First published: June 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...