• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விஜய்யின் பீஸ்டுக்கு போட்டியாக வெளியாகும் பிரபாஸின் ராதே ஷ்யாம்!

விஜய்யின் பீஸ்டுக்கு போட்டியாக வெளியாகும் பிரபாஸின் ராதே ஷ்யாம்!

பீஸ்ட்

பீஸ்ட்

ராதே ஷ்யாம் படத்தை 2022 சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 14 வெளியாவதாக அறிவித்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தை 2022 பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதேநாளில் பிரபாஸின் ராதே ஷ்யாம் திரைப்படமும் வெளியாவதாக அறிவித்துள்ளனர்.

பாகுபலி திரைப்படம் பிரபாஸை இந்திய அளவில் பிரபலப்படுத்தியது. அவரது தற்போதைய படங்கள் பான் - இந்தியன் திரைப்படங்களாக தயாராகின்றன. அதாவது தென்னிந்திய மொழிகளுடன் இந்தியிலும் இப்படங்கள் வெளியாகும். அவரது அடுத்த வெளியீடு ராதே ஷ்யாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிரபாஸ், பூஜா ஹெக்டே நடித்திருக்கும் இந்தப் படத்தை ராதா கிருஷ்ண குமார் இயக்கியுள்ளார். டி சீரிஸ் பூஷன் குமார் தயாரிப்பு. ஒரே நேரத்தில் தெலுங்கு, இந்தியில் உருவாகிவரும் இந்தப் படத்தை தமிழ், மலையாளம், மற்றும் கன்னட மொழிகளிலும் வெளியிடுகின்றனர். படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். சுமார் 300 கோடி பட்ஜெட்டில் இந்தப் படம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

Also read... உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் தயாராகும் ஜெய் பீம் - புகைப்படங்கள் தொகுப்பு

ராதே ஷ்யாம் படத்தை 2022 சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 14 வெளியாவதாக அறிவித்துள்ளனர். தெலுங்கில் சங்கராந்தி என்றால் இங்கே தமிழகத்துக்கு பொங்கல். தமிழ்நாட்டில் பீஸ்டின் வேகத்தை ராதே ஷ்யாமால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மாநிலங்களில் பீஸ்டுக்கு கடும் போட்டியை ராதே ஷ்யாம் கொடுக்கும்

ஆனால், இந்த வெளியீட்டு திட்டங்கள் எதுவும் உறுதியில்லை. கொரோனா பரவலைப் பொறுத்து கடைசிநேர மாறுதலுக்குட்பட்டவை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: