Home /News /entertainment /

நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தின் கதை இதுதான்?

நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தின் கதை இதுதான்?

பீஸ்ட் படக்குழு

பீஸ்ட் படக்குழு

விஜய்யின் 65 வது படமாக பீஸ்ட் தயாராகியுள்ளது. இந்தப் படத்தின் கதை தங்கக் கடத்தலை பின்னணியாகக் கொண்டது என கூறப்படுகிறது.

  • News18
  • Last Updated :
பீஸ்டை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் வெளிவந்த கோலமாவு கோகிலா, டாக்டர் படங்கள் வெற்றி பெற்றன. இந்த இரு படங்களும் பிளாக் காமெடிக்கு முக்கியத்துவம் தந்து எடுக்கப்பட்டவை. விஜய் மாஸ் ஆக்ஷன் ஹீரோ. ஆகவே, நெல்சனின் முந்தைய இரு படங்களிலிருந்து பீஸ்ட் மறுபட்டிருக்கும் என்கிறார்கள்.

பீஸ்ட் படத்தின் கதை தங்கக் கடத்தலை மையப்படுத்தியது என உள்வட்ட தகவல்கள் கூறுகின்றன. விமான நிலையம் வழியாக தங்கம் கடத்தப்படுவதை பின்னணியாகக் கொண்டு பீஸ்ட் எடுக்கப்பட்டிருப்பதாகவும், இந்த கடத்தல் வேலைகளில் ஈடுபடுகிறவராக ஷைன் டாம் சாக்கோ நடித்திருப்பதாகவும், அவர் பிரதான வில்லன்களில் ஒருவரான செல்வராகவனின் ஆளாக படத்தில் வருவதாகவும் கூறப்படுகிறது.

Also read... இந்தியின் பிரமாண்ட படத்தை தமிழகத்தில் வெளியிடும் ராஜமௌலி

நாயகி பூஜா ஹெக்டேயின் சகோதரியாக அபர்ணா தாஸ் நடித்துள்ளதாக மேலும் தகவல்கள் கூறுகின்றன. விஜய் ராணுவ பயிற்சி பெற்ற கமாண்டோவாக நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தின் புரமோஷன் பாடல் சமீபத்தில் எடுக்கப்பட்டது. இதில் விஜய், சிவகார்த்திகேயன், அனிருத், நெல்சன் ஆகியோர் நடித்துள்ளனர்.  படத்தின் முதல் முன்னோட்ட டீஸர் புத்தாண்டையொட்டி வெளியாக வாய்ப்புள்ளது.

முதல்நாள் வசூலில் பாகுபலியை வீழ்த்தி 'புஷ்பா' சாதனை

நெல்சனின் முதல் படம் கோலமாவு கோகிலா போதைப் பொருள் கடத்தலை மையப்படுத்தியது. இரண்டாவது குழந்தைகள் கடத்தல். பீஸ்ட் தங்கக் கடத்தல். இதுவும் பிளாக் பஸ்டர் ஹிட்டாகும் என நம்பிக்கையுடன் இருக்கிறது படக்குழு.

நயன்தாரா, சமந்தா படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்!
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Vijay, Beast

அடுத்த செய்தி