விஜய்யின் அடுத்த பட இயக்குநர்... மேடையில் போட்டு உடைத்த சினிமா பிரபலம்

விஜய்யின் அடுத்த பட இயக்குநர்... மேடையில் போட்டு உடைத்த சினிமா பிரபலம்
விஜய்
  • News18
  • Last Updated: September 14, 2019, 1:16 PM IST
  • Share this:
காதல் அம்பு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஜாக்குவார் தங்கம், ‘தளபதியை வைத்து படம் இயக்கும் பேரரசுக்கு வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளார்

பிகில் திரைப்படத்தை அடுத்து இயக்குநர் லோக்கேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் மாதம் துவங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து விஜய்யை வைத்து ஏற்கனவே திருப்பாச்சி, சிவகாசி உள்ளிட்ட படங்களை இயக்கிய பேரரசு மற்றும் திருமலை, ஆதி உள்ளிட்ட படங்களை இயக்கிய ரமணா உள்ளிட்டோர் அடுத்த படத்தை இயக்கப்போவதாக தகவல்கள் வெளியானது.

இயக்குநர் ரமணா அவர்கள் விஜய்யை வைத்து தான் படம் இயக்க போவதில்லை அது வெறும் வதந்தி என்று தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்தார். பேரரசு செய்தியும் வதந்தியாக இருக்குமோ..? என்று எதிர்பார்த்த நிலையில் சென்னை வடபழனியில் நடைபெற்ற காதல் அம்பு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்க இருக்கும் இயக்குநர் பேரரசுக்கு என்னுடைய வாழ்த்துகள் என்று ஜாக்குவார் தங்கம் கூறியுள்ளார்.


இந்த செய்தியை கூறியதும் இயக்குநர் பேரரசு தனது நன்றியை ஜாக்குவார் தங்கம் அவர்களுக்கு தெரிவித்தார்.

காதல் அம்பு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இயக்குநர் பேரரசு, நடிகர் ஆரி ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Also watch
First published: September 14, 2019, 1:08 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading