Home /News /entertainment /

RRR படத்தை விடுங்க..1990ல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ’வைஜெயந்தி ஐ.பி.எஸ்’ பற்றி தெரியுமா?

RRR படத்தை விடுங்க..1990ல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ’வைஜெயந்தி ஐ.பி.எஸ்’ பற்றி தெரியுமா?

வைஜெயந்தி ஐ.பி.எஸ்!

வைஜெயந்தி ஐ.பி.எஸ்!

தெலுங்கு சினிமாவில் ஹீரோக்களுக்கு மீறிய புகழ் மற்றும் சம்பளத்துடன் அசத்தியவர் நடிகை விஜயசாந்தி.

    ஆர்.ஆர்.ஆர். உள்ளிட்ட தெலுங்கு படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் காலம் இது. தெலுங்கு படங்கள் தமிழ் ரசிகர்களை வசீகரிப்பது ஒன்றும் புதிதல்ல... 1990களிலேயே பல படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு பெறும் வெற்றி பெற்றுள்ளன. அதில் முக்கியமான திரைப்படம் ‘வைஜெயந்தி ஐ.பி,எஸ்’. இதைப்பற்றி ஒரு சிறப்பு தொகுப்பு.

    தெலுங்கு சினிமாவில் ஹீரோக்களுக்கு மீறிய புகழ் மற்றும் சம்பளத்துடன் அசத்தியவர் நடிகை விஜயசாந்தி. 1990ல் தெலுங்கில் இவர் காவல்துறை அதிகாரியாக நடித்து வெற்றி பெற்ற திரைப்படமான ‘கர்த்தவ்யம்’ இவருக்கு ’லேடி சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்தை கொடுத்தது. இத்திரைப்படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ’வைஜெயந்தி ஐபிஎஸ்’ என்ற பெயரில் வெளிவந்து சக்கை போடு போட்டு மாஸ்டர் ப்ளாஸ்டர் ஆனது.

    ஒரு பெண் போலீஸ் அதிகாரி நேர்மையாக இருப்பதால் தன் வாழ்வில் அனுபவிக்கும் கஷ்டங்களும், பின்னர் அதிலிருந்து மீண்டு எதிரிகளை அழிப்பதுமேயான இக்கதையில் பெண் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் விஜயசாந்தி. இத்திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப் படுத்தியதற்காக விஜயசாந்திக்கு தேசிய விருதும் கிடைத்தது.

    தமிழ் சினிமாவின் பாசக்கார அம்மா … நடிகை சரண்யா பொன்வண்ணன் பிறந்தநாள் ஸ்பெஷல்!

    கதாநாயகர்களின் ஆதிக்கம் நிறைந்த அந்த காலகட்டத்தில் ஒரு சில பாடல் காட்சிகளுக்கு மட்டுமே கதாநாயகிகள் தேவைப்பட்டனர். ஆனால் அந்த பிம்பத்தை உடைத்தெறிந்து போலீஸ் அதிகாரியாக சண்டை போடும் ஸ்டைலிலும், ஆவேசமான வசன உச்சரிப்பிலும், போலீஸ் அதிகாரிக்கே உரிய லுக்கிலும் பிரமாதப்படுத்தி கதாநாயகர்களுக்கே டஃப் கொடுத்தார் விஜய சாந்தி.



    போலீஸ் படங்களில் பொதுவாக ஹீரோக்கள் மட்டுமே மாஸ் காட்டி வந்த வேளையில், யாரும் எதிர் பாராவண்னம் பெண் போலீசாக வந்து ஹீரோக்களுக்கு இணையாக அனைவரையும் தனது ஆக்ஷன் மூலம் மிரள வைத்தார் விஜயசாந்தி. காவல் நிலைய ரைட்டர் டேபிளின் மீது இரு அடியாட்கள் இவரை பிடித்துக்கொள்ள, அதன்பின் சம்மர்சால்டை அசால்ட்டாய் அடிக்கும் விஜயசாந்தியின் ஸ்டண்ட் காட்சியிலும்….. வெளிர்மஞ்சள் ட்ராக் சூட்டில், முழுக்கையை முக்கால் கைக்கு தள்ளிவிட்டுக்கொண்டு, ஒரு குதிரைவால் சிகை அலங்காரத்துடன் ஆவேசமாய் எதிரிகளை அடித்து தூள் கிளப்பும் காட்சியிலும் விசிலை பறக்கவிட்டனர் ரசிகர்கள்.

    K.G.F: Chapter 2 ராக்கி பாயின் அம்மா தமிழ் சீரியல் நடிகையாம்! உங்களுக்கு தெரியுமா?

    பல முன்னணி நடிகைகள், குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்த போது, முதல் முறையாக அதிரடி சண்டை காட்சிகளில் நடித்து ’லேடி சூப்பர் ஸ்டார்’ என பெயர் பெற்ற விஜயசாந்தி என்கிற வைஜெயந்தி ஐ.பி.எஸ் க்கு ஒரு சல்யூட்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Kollywood, Tollywood, Vijayashanti

    அடுத்த செய்தி