Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

‘விஜயானந்த் திரைப்படத்தை உருவாக மணிரத்னம்தான் காரணம்’ - இயக்குனர் ரிஷிகா சர்மா பேச்சு

‘விஜயானந்த் திரைப்படத்தை உருவாக மணிரத்னம்தான் காரணம்’ - இயக்குனர் ரிஷிகா சர்மா பேச்சு

விஜயானந்த் படக்குழுவின் செய்தியாளர் சந்திப்பு

விஜயானந்த் படக்குழுவின் செய்தியாளர் சந்திப்பு

விஜயானந்த் படத்தின் நடிகர்கள் பேசுகையில் தமிழ் சினிமா பல மொழிகளில் இருந்து வரும் திறமையாளர்களை ஆதரித்துக் கொள்ளும் என கூறினர்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜயானந்த் திரைப்படம் உருவாகுவதற்கு தமிழ் இயக்குனர் மணிரத்னம்தான் காரணம் என்ன படத்தின் இயக்குனர் ரிஷிகா சர்மா கூறியுள்ளார்.

கர்நாடகாவில் பிரபல தொழிலதிபராகவும்,  முன்னாள் எம்.பி ஆகவும் இருந்த விஜய் சங்கேஸ்வரர் என்பவரின் வாழ்க்கையை மையமாக வைத்து விஜயானந்த் என்ற திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.  இந்த திரைப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

இதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் படத்தின் இயக்குனர் ரிஷிகா சர்மா மற்றும் நடிகர்கள் நிஹல், பரத், ஸ்ரீ பிரஹலாத்  தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர். மேலும் விஜய் சங்கேஸ்வரர் மகன், ஆனந்த் சங்கேஸ்வரரும் இந்த நிகழ்வில் பங்கேற்றார்.

சந்திரமுகி 2 படத்தில் இணையும் கங்கனா ரனாவத்… வில்லி கேரக்டரில் நடிப்பார் என தகவல்…

அப்போது விஜயானந்த் படம் குறித்து பேசிய இயக்குனர் ரிஷிகா சர்மா பேசும்போது, விஜய் சங்கேஸ்வரரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை எடுக்க தமிழ் இயக்குனர் மணிரத்னத்தின் குரு திரைப்படம்தான் காரணம் என்று கூறினார். சினிமாவை தான் முறைப்படி கற்கவில்லை. ஆனால் மணிரத்னம் போன்ற இந்திய இயக்குனர்களிடம் இருந்து சினிமாவை கற்றுக் கொண்டதாக தெரிவித்தார்.

அத்துடன் மணிரத்னம் இயக்கிய குரு திரைப்படம்தான் இந்த விஜயானந்த் திரைப்படத்தை எடுக்க காரணமாக அமைந்தது எனவும் கூறினார்.  முதலில் இந்த திரைப்படத்தை கன்னடத்தில் மட்டும் எடுக்க திட்டமிட்டதாகவும்,  ஆனால் படப்பிடிப்பு நடைபெற்ற சமயத்தில் விஜய் ஆனந்த் திரைப்படத்தை அனைத்து மொழிகளிலும் வெளியிட யோசனை வந்ததாகவும் அவர் கூறினார்.

அதேபோல் தமிழில் நடிகர் அஜித்தை அவருக்கு மிகவும் பிடித்த நடிகர் என கூறினார். மேலும் தமிழில் இயக்குனர் சுதா இயக்கிய சூரரைப்போற்று திரைப்படம் கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இருந்தது. அதை மிக சிறப்பாக சுதா இயக்கியிருந்தார்.  அதில் கேப்டன் இறுதியில் வெற்றியடைவது போன்ற காட்சிகள் இருக்கும். ஆனால் இந்த விஜயானந்த் திரைப்படத்தின்  திரைக்கதை வெற்றியில் இருந்து  ரிவர்சில் அமைந்துள்ளது என குறிப்பிட்டார்.

WATCH – யோகி பாபு, ஓவியா நடிக்கும் ‘பூமர் அங்கிள்’ படத்தின் ட்ரெய்லர்…

மேலும் இந்த திரைப்படத்தில் வெறும் ட்ராவல்ஸ்  மட்டுமில்லாமல் இன்னும் பல விஷயங்கள் உள்ளன என ரிஷிகா சர்மா கூறினார். நடிகர்கள் பேசுகையில் தமிழ் சினிமா பல மொழிகளில் இருந்து வரும் திறமையாளர்களை ஆதரித்துக் கொள்ளும் எனவும் கூறினர். விஜயானந்த் திரைப்படம் வரும் 9ம் தேதி வெளியாக உள்ளது.

First published:

Tags: Kollywood