காவல்துறை அதிகாரியாக களமிறங்கும் விஜயகாந்த் மகன்!

news18
Updated: June 14, 2019, 5:22 PM IST
காவல்துறை அதிகாரியாக களமிறங்கும் விஜயகாந்த் மகன்!
நடிகர் சண்முகபாண்டியன்
news18
Updated: June 14, 2019, 5:22 PM IST
விஜயகாந்தின் மகனும் நடிகருமான சண்முகபாண்டியன் தனது அடுத்த படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்.

விஜயகாந்தின் இளையமகன் சண்முகபாண்டியன். சகாப்தம் படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து மதுரைவீரன் என்ற படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது இவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. வீரம், விவேகம், வேதாளம் உள்ளிட்ட படங்களில் சிவாவுடன் இணை இயக்குநராக பணியாற்றிய பூபாலன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

சண்முகபாண்டியனுக்கு ஜோடியாக ரோனிக்கா நடிக்கிறார். இவர்களுடன் வம்சி கிருஷ்ணா, முனிஷ்காந்த், பவன், சாய் தீனா, அழகம் பெருமாள், பப்பு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜுலை மாதம் முதல் படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.படம் குறித்து இயக்குநர் பூபாலன் கூறுகையில், “விஜயகாந்த் அவர்களின் சூப்பர் ஹீரோ காவல்துறை படங்கள் தான் அவரது அடையாளம் என்று கூறலாம். நான் இந்த ஸ்கிரிப்டை எழுதியபோது, ​​அவருடைய உயரம் மற்றும் தோற்றத்துடன் இந்த கதை பொருந்தும் என உணர்ந்தேன். சண்முக பாண்டியன் எனது முன்னணி கதாநாயகனாக நடிக்கிறார். இருப்பினும், இது ஒரு வகையான மேலதிக போலீஸ் கதை அல்ல.

காஞ்சிபுரம் நகரில் தனது கல்லூரி முடித்து போலீஸ் படையில் தெரிவு செய்யப்பட்டு தனது சொந்த இடத்திற்குத் திரும்புகிறார் கதாநாயகன். காதல், நகைச்சுவை, உணர்ச்சிகள் கலந்த கமர்ஷியல் திரைப்படம். போலீஸ் சமுதாயத்திற்கு சமர்ப்பிக்கும் படம் இது” என்று கூறியுள்ளார்.

வீடியோ பார்க்க: விஜயகாந்திடம் ஆதரவு கோரிய பாக்யராஜ் அணி!
Loading...
First published: June 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...